உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




54

அப்பாத்துரையம் - 39

பொன்னின் அருமையே அது செலாவணியாயிருக்க உதவும் உயர் பண்பு என்று கூறினோம். இவ்வருமைப் பாட்டில் கூடுதலோ குறைவோ நேர்ந்தால் என்ன நேரும் என்று பார்ப்போம். பொன் விளைவு மிகுதிப்பட்டது அல்லது உலகில் உள்ள அளவு வேறெக்காரணங்கொண்டோ மிகுந்தது என்று வைத்துக் கொள்வோம் அப்போது விலைகுறையும். குறையவே பொன்னை எடுப்பவர்களின் செலவு கட்டாது.விளைவும் குறைந்து பழையபடி விலை ஏறவேண்டி வரும். பொன் விளைவு குறைந்தாலும் இவ்வாறே தானாகச் சரிப்பட்டுவிடும். விளைவு குறைவினால் விலை கூடுதல்; விலை கூடுவதால் விளைவு செய்பவருக்கு ஊதிய மிகுதி; ஊதிய மிகுதியினால் விளைவு மிகுதி. ஆக இத்தகைய இயற்கைச்சுழலின் தன்மையினாலும் பிற பண்புகளினாலும் பொன் கிட்டத்தட்ட இயற்கைச் செல்வமாய் படைப்பிலேயே அமைக்கப் ட்டதென்று கூறும் நிலையில் உள்ளதாகும். கடலிலிருந்து தோன்றிய மழை எப்படியும் சுற்றி இறுதியில் கடலில் விழுந்து சரி ஒப்புநிலை அடையும் வகையையும் காற்று மண்டலத்திலும் கடலிலும் சூடுள்ள இடத்தில் நீரும் காற்றும் எழுந்து மேற்சென்று அவ்விடம் குளிர்ந்த காற்றும் நீரும் வந்து நிரப்ப. அக்குளிர்ந்த நீர் அல்லது காற்றிலிருந்த இடத்தை மீட்டும் சூடான காற்றும் நீரும் போய் நிரப்பும் இயற்கை அருமை போன்றதே தங்கத்தின் இந்தத் தங்காத்தன்மையும் இந்தச் செல்வத்தின் செல்லும் தன்மையுமாகும்.

மேற்காட்டிய விளக்கத்தால் பொன் ஏன் மாறா விலையுடையது என்று காட்டினோம். பொன் விலையில் ஏற்றத் தாழ்வு ஏற்படலாம். எல்லாப் பொருள்களையும் போல் அதுவும் பொருள் என்ற வகையில். ஆனால் அது விலையற்றுப்போகவோ அழியவோ செய்யாது. இதனாலேயே இன்று வேண்டாம். நாளை வேண்டும் என்று சேமிப்பவர்க்குத் தங்கத்தைவிட மேலான பொருள் இந்நாகரிக காலத்திலும் வேறில்லை. வாணிப உலகிலும் பங்குரிமை உலகிலும் பணமிடுபவர்கள் அதனால் பெரும்பயனடைகிறார்கள் என்பது உண்மை. ஆனால் இது வாணிப முறையே யாகும். அவர்கள் முதலும் வட்டியுமாய் வரினும் வரலாம். முதலுக்கே மோசம் வந்தாலும் வரலாம். ஆனால் தங்கத்தைச் சேமிப்பதால் வரும் கேடும் நலமும் தங்கம்விலை உயர்வும் தாழ்வுமே. எல்லாப் பொருள்களின்