உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




70

அப்பாத்துரையம் - 39

தெரிகிற ஈத்தங் குப்பத்தில் இருக்கிறாள். வாருங்கள்! உங்களுக்கு எல்லாம் விளக்குவாள்?” என்றான்.

குழந்தைகளின் தாயும் மானேந்தியும் சிறிது நேரம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தனர். பின் திடீரென மானேந்தியை அடையாளம் கண்டு, மார்கழி அவன் காலடியில் தலை புதைத்து அழுதாள். 'மாமா,மாமா' என்று சுற்றிய குழந்தைகளை அவள் எடுத்து அவனிடம் தந்தாள். 'இவர் மாமா அல்ல. இவர்தான் உங்கள் அப்பா!' என்று குழந்தைகளிடமும் 'இந்தச் செல்வங்கள் தாம் நம்பிள்ளைகள்' என்று மானேந்தியிடமும் கூறினாள். மானேந்தி மனைவியையும் மக்களையும் ஆரஅணைத்தெடுத்து இன்பக் கண்ணீராட் டினான். திருவதிகை வந்தது, மார்கழியின் தாய்தந்தையர் வரலாறு அறிந்தது முதலான செய்திகளை எல்லாம் மானேந்தி மார்கழிக்கு எடுத்துரைத்தான். அத்துடன் தான் இன்னான் என்பதையும் முதல் தடவையாக அவளுக்குக் கூறினான்.

உலகமறியா இளநங்கையாகவே பாலைவனத்துக்கு வந்த மார்கழிக்கு அந்தப் பாலைவனம் ஓர் உலகப் பள்ளியாய் அமைந்திருந்தது. அதில் பிறந்த பிள்ளைகளுடனும், அதிலே தனக்குப் புது வாழ்வளித்த கணவனுடனும் அவள் திருவதிகை வந்து சேர்ந்தாள். ஏற்கெனவே மானேந்தியிடம் பாசங் கொண்டிருந்த திருவதிகை மக்களுக்கு மார்கழியின் ஆர்வக் கதை ஒரு புதிய இன்பக்காவியமாயிற்று. மானேந்தியையும் மார்கழியையும் அரசுரிமை பெறச் செய்யும் முயற்சியில், திருவதிகை மட்டுமன்றிப் பல அண்டையயல் நகரங்களும் ஒத்துழைத்தன.சேந்தமங்கலத்தின் நகராட்சிமன்றமே இடைக்கால மன்னனை வெளியேற்றி அவர்களைத் தவிசேற்றி மகிழ்ந்தது.

சேந்தமங்கல அரசிலேயே செம்பாலை திருவதிகை ளவரச சனாகச் சிறிய பட்டம் கட்டப் பெற்றான்.பொலம்பாலை சோழப் பேரரசுக்குரிய இளவரசனையே மணம் புரிந்து முழுநில அரசியானாள்.