உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




78

அப்பாத்துரையம் - 40

படகு மறைவதைப் பெடிவீயர் பார்த்தல்

ஆர்தர் என்றுமே எதிர்ப்பவரைத் தாக்குவதன்றி ஓடுபவரைத் துரத்துவதில்லை; ஒரு சில வீரருடன் வெற்றி வீரராய், ஆயின் வீரரனைவரையும் இழந்தோமே என்ற துயரத்துடன் அவர் நின்றார். அச் சமயம் மாட்ரெட் மறை விலிருந்து வெளிவரவே இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கினர். நெடுநேரம் போர் புரிந்து இருவரும் ஒருவரை ஒருவர் படுகாயப் படுத்தினர். இருவரும் சோர்ந்து விழப்போகும் சமயம் முழு வன்மையையும் கொண்டு ஒருவர்மீது ஒருவர் வாளை ஓச்சினர். மாட்ரெட், ஆர்தர் வாளால் ஒரு பிளவாகப் பிளக்கப்பட்டு உடனே மாண்டான். ஆர்தர் மண்டையுடைந்து வலிமை முற்றிலும் அற்றுப் படுகாயத்துடன் சாய்ந்தார். அவர் ஆர்தரைத் தம் தோள்மீது தாங்கி ஸாக்ஸானியரால் பெரும்பகுதி அழிக்கப்பட்டுக் கடற்கரையிலிருந்த ஒரு கோயிலில் கொண்டு சென்று படுக்கவைத்தார்.

ஸாக்ஸானியரை

டு

நடுங்கவைத்து ரோமானியரை முறியடித்துப் பிரிட்டனெங்கும் ஆணைசெலுத்தியதுடன் தீமையையே உலகெங்கும் ஒடுங்கும்படி செய்த வீரகோளரியான ஆர்தர், பெடிவீயரன்றி வேறு துணையற்ற நிலையில், போர் வெற்றியிடையேயும் வாழ்க்கையில் சலிப்பும் முறிவுமுற்றுத் தனியே கிடந்தார்.