உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




82

அப்பாத்துரையம் – 40

பெடிவீயர், "ஐயனே! நான் ஒருவன் தனித்து இவ் வெற்றுலகில் வாழவா?” என்று துயரத்துடன் கேட்டான் ஆர்தர், "அன்பரே! வருந்த வேண்டா; உன் புண்கள் குணப்பட்டு பிரிட்டனின் கெட்டகாலம் நீங்கிய பின்மீண்டும் வருவேன். இன்றிறந்த வீரர் மீண்டும் எழுவர். அதுவரை நும் கடனாற்றி நாள் கழிக்க. இதுவே இறைவன்அமைதி,' என்று கூறியகன்றார்.

படகு ஒரு புள்ளியாகுமளவும் காத்திருந்து பெருமூச்சுடன் பெடிவீயர் திரும்பிவந்து பிரிட்டன் மக்களுக்கு இவ்வரிய வரலாற்றைக் கூறி அவர்கள் கண்களில் பெருமித உணர்ச்சியையும் வியப்பையும் துயரையும் ஒருங்கே ஊட்டினார்.

லான்ஸிலட்டும் கினிவீயரும் தம் மீந்தநாளை இறை பணியில் கழித்துத் தொண்டாற்றி நோன்பு நோற்று ஆர்தரடி சார்ந்தனர்.

பழைய

பிரிட்டானியராகிய வேல்ஷ் மக்கள் இன்னும் ஆர்தர் மீண்டும் வந்து தமக்கு நல்ஆட்சியும் இறையருட் பேறும் நல்குவர் என்று எதிர் நோக்குகின்றனர்.

அடிக்குறிப்புகள்

1.Britain 2. Uther 3. Rome 4. Goths 5. Britains 6. Saxons 7. Scot 8.Plets 9.Garlios 10. Ygerne 11. Arthur 12. Bellicent 13. Orkney 14. Lot 15. Merlin 16. Sir Anton 17. Excalibur 18. Camelot 19. Sir Ky 20. Knight 21. Camellard 22. Leodogran23. Guinevere 24. Sir Bedivere 25. Sir Lancelet 26. Badon Hill. 27. ஆர்தர் காலத்துக்குப்பின் அவர்கள் மீட்டும் வந்து கொள்ளையடித்ததுடன் நில்லாது குடியேறி நாட்டில் பெரும்பகுதியையும் கைப்பற்றினர். அவர்களே இன்று ஆங்கிலேயர் என்று அழைக்கப்படும் இங்கிலாந்துக் குடிகள். பழைய பிரிட்டானியர் மேற்கேயுள்ள மலை நாடுகளாகிய வேல்ஸிலும், கார்ன்வால், கிளைடு ஆகிய இடங்களிலும் சென்று தங்கினர். அவர்களில் பெரும்பகுதியார் இன்று வெல்ஸில் வாழும் வெல்ஸ் மக்கள் ஆவர். 28. Sir Turquine of the Manor 29. Sir Lionel 30. Sir Ector 31. Sir Gaheris 32. Whitson 33. Sir Beaumains 34. Linet 35. Lady Liones36. Red Knight of the Red Lawns.37. Gareth 38. Edyrn 39. Devon Shire 40. Sir Geraint 41. Enid 42. Limours 43. Doorm 44. Edyrn 45. Sir Balin 46.Maiden with the Sword 47. Vivien 48. Lyonesse 49. Castle of Astolat 50. Sir Torre 51. Sir Lavaine 52. Lily Maid 53. Elaine 54. Sir Gawaine 55. Modred 56. France 57. Abbey at Almsbury 58. Sir Gavains 59. Bedevere 60. Excalibur 61. Sir Galahad