உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




90

|---

-

அப்பாத்துரையம் 40

உணவு ஒரு பொன் இலையில் படைக்கப்பட்டிருப்பதை அவள் கண்ணுற்றாள். அவளுக்கும் பசி நன்றாக வந்துவிட்டிருந்தது. ஆயினும் தன்னை யாரும் அழைக்காமல் அந்த உணவைத் தான் உண்பது முறையல்ல என்று அவள் கருதினாள். உடனே அவள் பெயரை விளித்து ஒரு குரல் எழுந்தது. கண்ணுக்கு யாரும் தெரியாமலே குரல் கேட்பதை உணர்ந்த சைக்கீ நடுங்கிவிட்டாள். “சைக்கீ, ஏன் அஞ்சுகிறாய்? இந்த உணவு உனக்குத்தான் படைக்கப்பட்டிருக்கிறது. தெய்வங்கள் உனக்கெனத் தேர்ந்தெடுத்த உன் கணவனின் மாளிகைதான் இது. சிறிதும் கூசாமல் அஞ்சாமல் உண்ணு. இன்றிரவு உன் கணவன் உன்னைக் காண வருவான்,” என்று அக்குரல் அவளுக்கு ஆறுதல் கூறியது.

அச்சம் தெளிந்த சைக்கீ சுவைமிக்க அவ்வுணவை உண்டு, களைப்பு நீங்க அருகிலிருந்த கட்டிலில் படுத்தாள். அப்போது அவள் கண்ணுக்குப் புலப்படாத பாடல்மகளிர் இன்னிசை பாடி அவளைத் தூங்க வைத்தனர். பிறகு அவள் கண்விழித்தபோது நன்றாக இருட்டிவிட்டிருந்தது. சைக்கீ துணுக்குற்று எழுந்தாள். அவள் அருகில் ஏதோ சலசலத்தது. கியூப்பிட்டின் சிறகுகள் படபடத்த ஓசைதான் அது; காதல் தெய்வம் இருட்டிலேயே அவளுடன் பேசினான். சைக்கீக்குத் தன் அருகில் இருப்பது யார் என்பதைத் தெரிந்துகொள்ள முடியாவிட்டாலும், கியூப்பிட்டின் ஆற்றலை உணர்ந்த சைக்கீ, தன் அச்சத்தைக் கைவிட்டாள்; அவன் அருகில் இருந்தால் தனக்குக் கேடு வராது என்ற உறுதி அவளுக்கு ஏற்பட்டது.

ஒவ்வோர் இரவும் கியூப்பிட் சைக்கீயைக் காண வருவான். சைக்கீ பெருமகிழ்வுற்று வாழ்ந்தாள்; ஆனால், அவள் ஒரு தடவையாவது அவன் உருவத்தைக் கண்ணால் கண்டதில்லை; அவள் காலையில் விழிக்குமுன் அவன் போய்விடுவான். பகல் எல்லாம் அப்பொன் மாளிகையில் அவள் தனிமையாகவே இருந்தாள்.

ப்படியே காலங்கழித்து வந்தது. ஒரு நாள் தன் தந்தையும் அக்காள்மார் இருவரும் தன்னைத் தேடி அழுவதாகக் கனாக்கண்டாள். அவர்களைப் பார்க்க விரும்புவதாக அவள் அன்றிரவு கியூப்பிட்டிடம் தெரிவித்தாள்.