உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




96

||--

-

அப்பாத்துரையம் 40

அவன் மனைவியான அரோரா மட்டிலும் என்றும் போல் குன்றா இளமையுடனும், மாறா எழிலுடனும் விளங்கினாள். தான் முதியவனான நிலையிலும் தன் மனைவி அழகு நிறைந்து விளங்குவதைக் குறித்து அவன் அடங்காப் பெருமை கொண்டான்.

ஆனால், மேலும் பல ஆண்டுகள் சென்றபின், அவனுக்கு திலுமே கருத்துச் செல்லவில்லை; எதையும் நுகர்ந்து மகிழ இயலாமற்போயிற்று. அவன் அவ்வளவு படுகிழமாகிவிட்டான். அவன் கால்கள் கால்கள் அவனைத் தாங்க முடியாதபடி வறு குன்றிவிட்டன. அவன் கண்கள் எதையும் பார்க்க முடியாதபடி ஒளி மங்கிவிட்டன; அவனிடம் உயிர்ப்போடு எஞ்சியிருந்தது அவன் குரல் ஒலி ஒன்றுதான் என்று கூறக்கூடிய நிலை வந்துவிட்டது.

அரோரா அவனைத் தன்னோடு நெடுநாள் வைத்திருந்தாள். ஆனால், கடைசியில் அவனது முனகலையும் குறைகளையும் கேட்டு அவள் சலிப்புற்றுவிட்டாள். தன்னைத் தன் போக்கில் இறந்துபோக விட்டுவிடும்படி அவன் கடவுளரை எப்போதும் வேண்டிவந்தான். ஆனால், அவனை அவர்கள் இறந்துபோக விடமாட்டார்கள் என்பது அரோராவுக்குத் தெரியும்; அவள்தான் அவனுக்குச் சாவாவரம் வாங்கியிருக்கிறாளே!

டிதோனசுக்கு எஞ்சியிருந்தது குரல் ஒலி மட்டுமே. ஆகையால், அவன் அதை டைவிடாது பயன்படுத்தினான்; எப்போதும் கூச்சலிட்டு இரைந்து பேசிவந்தான்; தான் சொல்வதை யாராவது கேட்கிறார்களா இல்லையா என்பதைப் பாராமலே, அவன் சொல்லியதையே மீண்டும் மீண்டும் திருப்பித் திருப்பிக் கத்தி வந்தான்.

அரோரா அவன் நிலைக்கு இரங்கினாள்; ஆனால், முன்பு அவன்மீது அவள் கொண்டிருந்த காதல் அற்றுப் போய்விட்டது. குழிந்த கண்ணும், எலும்புக்கூடாய் வற்றிய உடலும், வளைந்த காலும் உடையவனாய், தாழியில் வைக்கும் பருவத்திலிருந்த அக்கிழவனுக்கும், அவள் முன்பு காதலித்த இளங்காளை டிதோனசுக்கும் எவ்விதத் தொடர்பும் தென்படவில்லை. அவனும் அவள் ஒருத்தி இருப்பதையே உணரமுடியாதவனாகிவிட்டான்.