உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

66

101

சற்றே களைத்த மான் டயானாவைத் தஞ்சமடைந்தது. உடனே அவள் அதற்கு அபயமளித்து, ஹெர்க்யூலிஸ் முன் தோன்றி, 'மாவீர, உன்னை மெச்சினேன், உன் வீரம் பெரிதாயினும் நீ என் மானைக் கைப்பற்றல் தகாது; உன் பணி இத்துடன் நிறைவேறி விட்டது; நீ நலமே போய் உன் மன்னனிடம் இதைக் கூறு,” என்று அவனை வாழ்த்தி அனுப்பினாள். டயானாவின் இயற்கை இயல்பை இது எடுத்துக் காட்டும்.

L

ஒலிம்பசு மலையில் இருந்த பல தெய்வமாளிகைககளில் ஒரு மாளிகை பெரும்பாலும் ஆளில்லாமல் வெறுமனேயே இருக்கும். எப்போதாவது கடவுளர் பேரவை கூடும்போது மட்டிலும்தான் அதன் தலைவன் அங்கே வந்து இருப்பான்.மிச்ச நாட்களில் அவன் தன் தனிப்பட்ட தலைமை மாளிகையில், இதைவிட இன்னும் பேரழகுவாய்ந்த பொற்கோயிலில், கொலுவிருப்பான். அப்பொற்கோயில் எங்கே இருந்தது என்று உங்களால் கூறமுடியுமா?

அது கடலுக்கடியில் இருந்தது!

தனித் தங்கத்தினால் ஆன அம்மாளிகை மிகவும் பெரிது. ஆயிரக்கணக்கானபேர்கள் அங்கே வாழ இடமுண்டு. அதன் அடித்தளத்தில் நுண்ணிய வெண்மணல் பரப்பப்பட்டிருந்தது. அம்மணலுடன் முத்தும் வயிரமணிகளும் விரவப்பட்டிருந்தன. அந்த அரண்மனைப் பூங்காவில் பவளத்தாலான செய்குன்று களும் படிகமலைகளும் இருந்தன. அழகிய பலநிறப்பூக்கள் நிறைந்த கடற்செடிகளும் பச்சைப் பசேரென்ற கடற் பாசிகளும் அங்கே இருந்தன. சிறுசிறு மீன்கள் உள்ளே வந்து ஓடி ஆடித் திரியும் அங்கே பல குகைகளும் கெவிகளும் இருந்தன. அவைகளில் கடல் கன்னியர் வாழ்ந்து வந்தார்கள்.

அந்த அரண்மனையின் அரசன் நெப்டியூன். அவன் தான் கடல் இறைவன். அவன்தான் கடலுக்கடியில் இப்பெரு மாளிகையைக் கட்டியிருந்தான். அங்கே அவன் கொலுவிருந்தான். அவனுடன் அவன் மனைவி ஆம்பிட்ரைட் என்பவளும், மகன் ட்ரைட்டனும் வாழ்ந்து வந்தார்கள்.

நெப்டியூன் கையில் மூவிலைச்சூலம் ஒன்று இருக்கும். அவன் தன் சூலத்தால் கடலைக் குத்திக் கிழித்துப் பெரும் புயலை