உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




110 |_

அப்பாத்துரையம் 40

-

ஆனால், அந்த நொடியிலேயே, குலைநடுங்கவைக்கும் ஒரு நிகழ்ச்சி நேர்ந்துவிட்டது. அவள் காலடியில் பூமி வெடித்து, இருள் கவிந்த கெவி ஒன்று தோன்றியது. அதனுள்ளிருந்து நான்கு பெரிய கருங்குதிரைகள் கட்டிய பொன்தேர் ஒன்று எழும்பி வந்தது. அத்தேரில் திண்தோள் படைத்த ஒரு மன்னன் அமர்ந்திருந்தான். அவன் ஒரு மன்னனைப்போல் தலையில் பொன்முடி கவித்திருந்தாலும், அவன் முகத்தில் ஓர் அரசனுக் குரிய அழகும் பொலிவும் இல்லை. அவன் அவளருகில் வந்ததும் தன் தேரைச் சற்றே நிறுத்தி, அவளை வாரி எடுத்துக் கொண்டு, மீண்டும் அக்கெவியினுள் கடு விரைவாய்ச் சென்று விட்டான்.

"ஐயோ, பாதாள உலகின் மன்னன் ஏடீஸ் நம் பெர்செ போனீயைத் தூக்கிச் செல்கிறானே,” என்று அவள் தோழியர் கூக்குரலிட்டனர். "இறந்தோர் ஆவிகள் உறையும் தென் புலத்துக்கல்லவா அவன் அவளை எடுத்துச் செல்கிறான்,” என்று அவர்கள் அரற்றினர்.

வெடிப்பு மறைந்து நிலம் ஒன்று சேர்ந்தது; அந்த இடத்தில் மீண்டும் சூரியகாந்தி மலர்கள் பூத்தன. ஆனால், ஒரே காம்பில் நூறு மலர்கள் பூத்திருந்த அந்த விந்தைச் செடி மறைந்துவிட்டது. பெர்செபோனீயின் கண்ணைக் கவர்ந்து கருத்தை மாற்று வதற்காக ஏடீஸ் அங்கே நட்டுவைத்திருந்த மாய மலர்ச்செடிதான் அது.

சிறிதுநேரம் பொறுத்து டெமீட்டர் தன் அருமை மகளைப் பார்ப்பதற்காக அங்கே வந்தபோது, கடல் மகளிர் அங்கிருந்து போய்விட்டிருந்தனர். அவள் மகளுக்கு என்ன நேரிட்டது என்பதை அவளிடம் எடுத்துக்கூற அங்கே யாருமே இல்லை.

ஒன்பது நாள் அவள் அங்குமிங்கும் ஓடி அலைந்து தன் மகளை ஓயாது தேடினாள். ஒவ்வொரு நாள் கழியும் போதும் அவள் கவலை மேலும் பெருகியது. எட்னா எரிமலையில் ஏற்றிய இருபெரு பந்தங்களையும் பிடித்துக் கொண்டு அவள் எங்கெங்கெல்லாமோ தேடியும், அவள் மகள் போன இடம் தெரியவில்லை; பத்தாவது நாளன்றும் முதல் நாளிருந்ததைப் போலவே தன் மகள் பற்றிய யாதொரு துப்பும் தெரிய வராமையிலேயே அவள் இருந்தாள்.