உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




132

அப்பாத்துரையம் 40

-

மீந்தவற்றுடன் உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு அலைகளைத் தண்டுகளால் உதைத்துக்கொண்டு கிரேக்கர் தப்பிச் சென்றனர்.

ஈயோலஸ் என்ற அரசன் நாட்டிற்குக் கிரேக்கர் சென்றபோது அவன் அவர்களை விருந்தினராக ஏற்று அன்பு காட்டினான்.

மிக

ஐயை என்ற தீவில் மனிதரைவிட மிகவும் நெட்டையான ஸிர்கே என்ற மாயப்பெண் இருந்தாள். அவள் இனிமையாகப் பாடுபவள். பாட்டில் மயங்கியவர்களுக்கு வசியமருந்திட்ட இனிய குடிதேறலுங் கொடுத்து, அதன்பின் தன் மந்திரக் கோலால் தட்டி அவர்களை அவள் பன்றிகளாக்கி மகிழ்வாள். கிரேக்கர்களில் முதலில் சென்ற சிலர் இவ்வாறு பன்றியாகி விட்டனர். இது கண்ட ஒடிஸியஸ் தன் குடித்தெய்வமான ஹெர்மிஸை வேண்டினான். ஹெர்மிஸ் அருளால் மாயத்திலிருந்து தப்பி, ஸிர்கேயிடம் தன் வாள் வலிமையைக் காட்டினான். அவள் அவனுக்கு அடங்கி நட்பாடி, பன்றியான கிரேக்கரை மீண்டும் கிரேக்கராக்கி அனுப்பினாள். கடலகத்தில் இன்னும் ஏற்படக்கூடும் பல இடையூறுகளையும் அவற்றிலிருந்து தப்பும் நெறிகளையும் ஸிர்கே, ஒடிஸியஸுக்குச் சொல்லி உதவினாள்.

கடலின் ஒரு பக்கத்தில் பாறைகளிடையே ஸிரன்கள் என்ற கடலணங்குகள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் அழகிய உருவமும் இனிய குரலும் உடையவர்கள். அவர்கள் பாட்டு எவரையும் மயக்கவல்லது. ஆனால், மயங்கியவர்களை அவர்கள் பிடித்துத் தின்றுவிடுவர். ஒடிஸியஸ் முன்பே ஸிர்கேயால் இந்த டையூற்றை அறிந்தவனாதலால், தன் தோழர்கள் காதுகளை மெழுகினால் அடைத்துவிட்டான். தன்னையறியாமல் தான் பாடலணங்குகளிடம் செல்லாதபடி தன்னைப் படகுடன் கட்டி வைத்துக்கொண்டான்.

பாடலணங்குகளைக் கடந்த சில நாட்களுக்குள் விழுங்கு பாறையை அவர்கள் அணுகினர். ஒரு கடலிடுக்கு வழியாகக் கப்பல்கள் வரும்போது, இருபுறமும் உள்ள பாறைகள் வந்து அவற்றை நெரித்து அழித்துப் பின் பழைய நிலைக்கு வந்துவிடுவது வழக்கம். ஒடிஸியஸ் முதலில் ஒரு பறவையை