உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




134

|---

அப்பாத்துரையம் - 40

கணவன் வரவைக் கணந்தோறும் ஒவ்வொரு கணமாக எண்ணிப் பொறுமையுடன் காத்திருந்தாள் பெனிலோப் கணமும் நாழிகையும், நாளும் வாரமும், மாதமும் ஆண்டும் உருண்டுருண் டோடின. ஆனால், அவள் நம்பிக்கை இழக்கவில்லை. ஆனால் நாட்டு மக்கள் எல்லாரும் நம்பிக்கை இழந்தனர். ஆண்டு பத்தும் எட்டும் சென்றன; அவளை இனி யாரும் மணக்கலாம் என்று எண்ணிப் பல வீரர் வந்து மொய்த்தனர். அவளால் அவர்களுக்குத் தக்க மறுமொழியும் கூற முடியவில்லை. தடையும் செய்யமுடியவில்லை. கணவனைத் தவிர எவரைக் கண்டாலும் அவளுக்குத் தன் கடுஞ் சீற்றத்தையும் தடுக்கமுடியவில்லை. இந்நிலையில் எல்லாரையும் தடுத்து நிறுத்த அவள் ஒரு சூழ்ச்சி செய்தாள். அவள் தன் கணவன் திரும்பி வந்தவுடன் தருவதற்காக ஒரு கைக்குட்டையில் அழகான பின்னல் பூ வேலைசெய்து வந்தாள். தன் மறுமணத்துக்காகவே அதைப் பின்னுவதாக அவள் கூறினாள். “இது முடிந்தவுடன் யாரைத் திருமணம் செய்வது என்று உறுதி செய்வேன்," என்று சொல்லி அவள் நாள் கடத்தினாள். ஒவ்வொரு நாள் செய்த வேலையும் இரவு அழிக்கப்பட்டதால் நாட்கள், மாதங்கள் கழிந்தன.

இறுதியில் கணவன் வராத சீற்றத்தால், அதை முடித்துவிட்டாள். பின்னும் அவள் நாட்கடத்தச் சூழ்ச்சி செய்தாள். ஒடிஸியஸின் போர்க்கோடரிகள் பன்னிரண்டை அவள் நிலத்தில் அகல அகல நட்டுவைத்தாள். ஒவ்வொரு கோடரியிலும் ஒரு சிறுதொளை இருந்தது. ஒரே அம்பைப் பன்னிரண்டு கோடரியின் தொளைகளிலும் செல்லுமாறு எய்பவனைத்தான் மணப்பதாக அவள் கூறினாள்.

ஒடிஸியஸ் தவிர வேறு எவராலும் இதைச் செய்ய முடியாது என்பதை பெனிலோப் அறிந்திருந்தாள். எவரும் தன்னையடையாதபடி செய்யவே அவள் இச்சூழ்ச்சியை வகுத்திருந்தாள்.

ஒடிஸியஸ் இத்தனையையும் கேள்வியுற்றான். ஆண்டுகள் பல ஆனதாலும், பல இன்னல்களுக்குத் தான் ஆளானதாலும், தன்னைத் தன் மனைவி அடையாளம் காணமுடியாது என்பதையும் அதேனெ கூறியிருந்தாள். கணவன் தவிர எவன் அவளை அடித்தாலும் அவள் கடுஞ் சினத்துக்கு ஆளாக