உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




140

||--

-

அப்பாத்துரையம் 40

இடர்களைப் பற்றியும் வேறு எவரையும்விட அவனுக்கே மிகுதி தெரியும் என்று அவர்கள் அறிந்தனர். ஜேஸன் தன் தோழர் களுடன் அவனை அணுகித் தன் முயற்சிக்கு உதவியளிக்கும்படி வேண்டினான்.

“கட்டாயம் உதவி செய்கிறேன். ஆனால், முதலில் நீங்கள் எனக்கு உதவி செய்யவேண்டும். ஒவ்வொரு நாளும் நான் உண்ண உட்காருவதற்குள் கழுகுகள் வந்து என் உணவை உட்கொண்டு விடுகின்றன. இதனால் என்றும் நான் முக்காலைப் பட்டினியாய் இருந்துவருகிறேன். அந்தக் கழுகுகளை ஒழித்து எனக்கு உதவுங்கள்” என்று அவன் கேட்டான்.

ஜேஸன் இவ்வேலையை மிக எளிதில் செய்து முடித்தான். முதல் நாளிலேயே கழுகுகளில் அவன் அம்புகளுக்கு இரையாயினவைபோக மிகச் சிலவே மீண்டன. மறுநாள் வந்த ஒன்றிரண்டும் வீழ்ந்தபின் ஃவினியஸின் உணவு மேடைப் பக்கம் ஈ கூடஆடவில்லை. ஃவினியஸ் மகிழ்ந்து பயணத்துக்கு வேண்டிய எல்லா விவரங்களும் சொன்னான்.

கருங்கடலுக்குச் செல்லும் ஒரு நுழைவாயில் போன்ற ஸிம்பிள்கேடிஸின் ஆள்விழுங்கிப் பாறைகளை அவர்கள் அடைந்தனர். ஃவினியஸ் மூலம் அதன் இயல்பை அவர்கள் அறிந்திருந்தனர்.பாறைகளினிடையே எது சென்றாலும் பாறைகள் இருபுறமுமிருந்து வந்து நெருக்கி இடையில் அகப்பட்டவற்றை அழிவு செய்துவிட்டுப் பின் மீண்டுவிடும். ஜேஸன் ஒரு பறவையைத் தன் கப்பலின் முன்னால் பறக்கவிட்டான். பாறைகள் உடனே நெருங்கிப் பறவையை நெரித்துக் கொன்றன. அதன்பின் அது விரிவுற்றது.கப்பல் வேகமாக வந்தது.அதுகண்டு பாறைகள் விரிந்து மீண்டும் மூடத் தொடங்கு முன் ஜேஸனும் ஆர்கோநாவத்துடன் விரைந்து கடலிடுக்கைக் கடந்தான்.

ஜேஸனும் ஆர்கோநாவத்திலுள்ள வீரரும் கடந்த துறைமுகங்கள் பல. இறங்கி இளைப்பாறிய தீவுகளும் பல. இறுதியில் அவர்கள் காக்கஸஸ் மலைகளுக்கப்பால் சென்று கால்சிஸ் நகரை அடைந்தனர்.

கால்சிஸின் மன்னன் அயதிஸ். அவன் அவர்களை வரவேற்று, "வந்த காரியம் என்ன?" என்று உசாவினான்.