உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

149

சில

காலிடோனுக்கு வடபால் பல முரட்டுவகுப்பினர் நாடோடிகளாகத் திரிந்து வந்தனர். அவர்கள் அடிக்கடி காலிடோனுக்குத் தொல்லை கொடுத்தும் படையெடுத்துச் சூறையாடியும் வந்தனர். இம்முரட்டு மக்களுக்கு இப்போது புதிய ஊக்கமும் ஏற்பட்டிருந்தது. ஒளியஸ் குடியினர் தலைமுறையாக ஆர்ட்டெமிஸ் இறைவிக்குப் பலியிடும் வழக்கத்தை நிறுத்தியிருந்தனர். இச்சமயம் பார்த்து முரட்டு வகுப்பினர் அத்தேவிக்குப் பலியிட்டு அவள் ஆதரவைப் பெற்றனர். தேவி அருளால் அவர்களுக்கு மேன்மேலும் வெற்றி கிடைத்தது.வெற்றி கிடைக்கக் கிடைக்க, அவர்கள் துணிச்சலும் துடுக்குத்தனமும் பெருகின.

மெலீகர்

இந்நாடோடிகளை

எதிர்த்தடக்கிவிட

உறுதிகொண்டான். தந்தையை இவ்வகையில் ஊக்கி அவன் ணக்கம் பெற்று, படையுன் சென்று அவர்களைப் பல இடங்களிலும் மடக்கி ஒடுக்கினான்.

தோற்ற நாடோடிகள் ஆர்ட்டெமிஸுக்கு வழக்கமான பலியைக் கொடுக்காமலே குறையிரந்து முறையிட்டனர்.

ஆர்ட்டெமிஸ் தன் ஆதரவுபெற்ற புதிய மக்களுக்கு எதிராக வெற்றி கண்ட காலிடோன்மீது கடுஞ்சீற்றங்கொண்டு அதன்மீது பழி வாங்க ஒரு காட்டுப்பன்றியை ஏவிவிட்டாள். அது காலிடோன் எல்லையில் புகுந்து பயிர்களை அழித்தும், ஆடுமாடுகளையும் உழவர்களையும் குத்திக் கிளறியும் பேரழிவு செய்தது. இதனால் அழகிய பூங்காவனங்களெல்லாம் புதர்க்காடுகள் ஆயின. புல்மேடுகளெல்லாம் புழுதிமேடு களாயின.

மெலீகர் மீண்டும் போர்க்கோலம் பூண்டான். பன்றியின் பின்னணியிலிருந்து முரட்டு வகுப்பினர் அட்டூழியங்கள் செய்ததால், அவன் தலைசிறந்த வேட்டைக்காரரையும் வீரரையும் திரட்டி ஒரு படை சேர்த்து, அதனுடன் பன்றிமீதும் படர்ந்தழித்த முரட்டுக் கூட்டத்தினர்மீதும் போர்தொடுத்தான். பன்றியையும்

மெலீகருடன் சரிசமமாக நின்று

படுகளவீரரையும் எதிர்த்துத் தாக்கியது ஒரு பெண்மணி. அவள் பெயர் அட்லாண்டா. அவள் பத்து ஆடவராலும் தாக்குப் பிடிக்கமுடியாத உடல் வலிமையும் வீரமும் உடையவள். அவள்