உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

165

பாலிடெக்டிஸ் அடிக்கடி தன் தம்பி இல்லத்துக்கு வருவதுண்டு.அச்சமயங்களில் அவன் தனேயைக்கண்டான். அவள் அழகு அவனை மயக்கிற்று. அவன் அவளை மணம் செய்துகொள்ள விரும்பினான்.அடிக்கடிஅவளிடம் தன்னை மணந்துகொள்ளும்படி வேண்டினான். ஆனால், பெருந்தெய்வ மாகிய ஜீயஸூக்கே தனே தன்னை உரியவளாகக் கருதிவிட்டாள். எந்த மனிதரையும் அவள் மணக்க விரும்ப வில்லை. ஆதலால், பாலிடெக்டிஸ் எவ்வளவு வற்புறுத்தியும் அவள் இணங்கவில்லை.

தனேயை வயப்படுத்தும் எண்ணத்துடன் பாலிடெக்டிஸ் பெர்ஸியஸிடம் வெளிநட்புக் காட்டி வந்தான். ஆனால், வீரமும் கட்டழகும் வாய்ந்த அந்த இளைஞனை அவன் உள்ளூர வெறுத்தான். தாய் திருமணம் செய்யாமலிருப்பதற்கு, இத்தகைய மகன் இருப்பதே காரணம் என்று அவன் நினைத்ததனால், பெர்ஸியஸ் மீது அவன் வெறுப்பு இன்னும் மிகுதியாயிற்று. எப்படியாவது பெர்ஸியஸை ஒழித்துவிட வேண்டும் என்று

பாலிடெக்டிஸ்திட்டமிட்டான்.

ஒருநாள் பாலிடெக்டிஸ், பெர்ஸியஸை ஒரு விருந்துக்கு அழைத்தான்.நட்புப்பேச்சுக்கிடையே அவன் பெர்ஸியஸிடம்,“நான் கேட்ட எதுவும் நீ கொடுப்பாயா?” என்று வினவினான். அதை விளையாட்டாகஎண்ணி,பெர்ஸியஸ்"ஓகோ, கட்டாயம்,”என்றான்.

இதுதான் வாய்ப்பு என்று கருதிய பாலிடெக்டிஸ், “எனக்கு நீ வல்லரக்கி மெடூசாவின் தலையைக் கொண்டு வந்து கொடுக்கமுடியுமா?” என்றான்.

பெர்ஸியஸ் திடுக்கிட்டான்; மெடூசாவைப் பற்றி அவன் கோரமான செய்திகளைக் கேட்டிருந்தான். அவள் இருந்த டத் துக்கே யாரும் சென்றதில்லை. யாருக்கும் அதன் திசைகூடத் தெரியாது. அவள் அழகிய பெண் முகத்துடன், பாம்புகளையே தலைமுடியாகக்கொண்டு, கழுகுகளின் இறக்கை போன்ற பெரிய இறக்கைகளை உடையவள். மேலும் அவள் முகத்தைப் பார்த்தவர் கள் உடனே கல்லாய் விடுவார்கள். இத்தகைய வல்லரக்கியின் தலையை வெட்டிக் கொண்டுவரச் சொல்வதென்றால், சாகும்படி சொல்வதாகத்தான் பொருள். 'இங்ஙனம் சொல்பவன் நம் மாறாப் பகைவனே,' என்று பெர்ஸியஸ் தனக்குள் கூறிக்கொண்டான்.