உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




194

|__

-

அப்பாத்துரையம் 40

பச்சைக்கிளி, அவள் அவ்வளவு சீரும் சிறப்புமாக வளர்ந்ததும், அரசியாக வாழப்போவதும் அவளை அன்புடன் ஆதரித்து வளர்த்த ஓணானின் தயவால் என்பதையும், அஃதில்லாவிடில் ஏழைக் குடிசையில் அரைப் பட்டினியாகப் பாடுபட்டு உடல் நலிந்து உயிர்விடத்தான் வேண்டியிருக்கும் என்பதையும் எண்ணிப் பாராமல், ஓணான் தேவதைக்கு நன்றியையும் அன்பையும் தெரிவித்து ஒரு சொல்கூடச் சொல்லாமல் அரசனுடன் போய்விட்டாள்.

அவளது நன்றிகெட்ட நடையைப் பார்த்ததும் ஓணான் பொறுக்க முடியாதபடி துயரமும், சினமும் அடைந்தது. அதன் ஆத்திரத்தில், பச்சைக்கிளியின் முகம் குரங்கு மூஞ்சியாக மாறிவிடட்டும் என்று சபித்து விட்டது. அப்படியாவது அவள் நன்றிகெட்ட புத்தியை நொந்து மனந்திரும்புவாள் என்று ஓணான் தேவதை நம்பியது.

அரண்மனைக்கு வந்தபின் மணமகளின் முகத்தைப் பார்த்த அரசன் பெருஞ் சினமும், ஏமாற்றமும் அடைந்தான். அவன் காட்டில் கண்ட அழகிக்குப் பதிலாக, முகம் நீண்டும் சுருங்கிய குரங்கு மூஞ்சிப் பெண்ணைப் பார்த்ததும் அவள் பேரில் அவனுக்கு வெறுப்பு ஏற்பட்டு விட்டது. தான் ஏதோ மாயத்தால் ஏமாற்றப்பட்டதாக அவன் நினைத்தான்.

"இந்தக் குரங்கு மூஞ்சியை நான் திருமணம் செய்யவே முடியாது. இவள் என் சமையலறையில் பணிப் பெண்ணாக வேண்டுமானால் இருந்துவிட்டுப் போகட்டும்,” என்று அரசன் பச்சைக்கிளியை அரண்மனை அடுக்களைக்கு அனுப்பி விட்டான்.

அழகற்றவளாக இருக்கும் அந்தப் பெண் ஏதாவது பயனுள்ள வேலையைச் செய்யட்டும் என் று எண்ணி அவளிடமும், அவளது தோழியிடமும் தலைக்குப் பத்துக் கட்டு பஞ்சைக் கொடுத்து இருவரும் அதை நூற்று முடிப்பதற்கு ஒரு வாரத் தவணையும் கொடுத்தான். பச்சைக்கிளி அவள் முக மாறுதலை அறியவில்லை. அடுக்களையில் கண்ணாடி இல்லை. அரசியாக வாழவந்தவளை அப்படி இழிவாகக் குற்றேவல்கள் செய்ய அரசன் விதித்திருப்பதைக் குறித்துச் சினத்தால்