உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




196

அப்பாத்துரையம் - 40

மாளிகையின் தலைவாயிலில் பழைய காவலாளி ஒருவன் நின்று கொண்டிருந்தான். கதவைத் திறந்து அவளை உள்ளே விடுவதற்கு மாறாக, “யாரடி நீ, எங்கே வந்தாய். என்ன வேண்டும்?” என்று கடுகடுத்துப் பேசினான்.

வீட்டுக் காவலாளி அவளைப் பார்த்து அவ்வாறு பேசியதைக் கேட்கப் பச்சைக்கிளிக்குப் பெருஞ் சினம் உண்டாயிற்று. மிகவும் துடுக்குத்தனமாகப் பதில் சொன்னாள்:

66

ஏண்டா, குரங்கு மூஞ்சிக் கிழவா, என்னைத் தெரிய வில்லையா உனக்கு; உடனே என்னை உள்ளே விடுகிறாயா, இல்லையா?” என்றாள். குரங்கு மூஞ்சியுடனிருந்த அப்பெண் தன்னைப் பார்த்துக் குரங்கு மூஞ்சி என்று ஏளனமாகப் பேசியதைக் கேட்ட கிழவனுக்கு எவ்வளவு சினம் வந்திருக்கும் என்பதை நீங்களே நினைத்துப் பாருங்கள். அவள் முகம் குரங்கு முகமாக இருப்பதைப் பச்சைக்கிளி அதுவரை உணரவில்லை. அடுக்களையில் வேலை பார்க்கும் பணிப் பெண்ணுக்கு முக அழகு பார்க்கக் கண்ணாடி கிடைக்குமா? அதுவும், கண்ணாடி கிடைத்தற்கரிய பொருளாயிருந்த அந்தக் காலத்தில்!

அவளைச் சரியானபடி தண்டிக்க வேண்டும் என்று அவன் நினைத்தான். மாளிகை உள்ளே சென்று கண்ணாடி ஒன்றைக் கொண்டு வந்து அவள் முகத்துக்கு நேரே நீட்டினான். "நீயா என்னைப் பார்த்துக் குரங்கு மூஞ்சி என்று சொல்ல வேண்டும். பார் உன் முக அழகுச் சிறப்பை! உன் முகம்தான் குரங்கு மூஞ்சியாக இருக்கிறது. நன்றி கெட்ட நாயே! உனக்கு ஓணான் தேவதை என்னென்ன நன்மையெல்லாம் செய்திருக்கிறாள்; உனக்கு எவ்வளவு நகை போட்டு மகட்கொடையும் கொடுத் திருக்கிறாள்; எல்லாவற்றிற்கும் மேலாக உன்னை அரச வாழ்வுக்கு உரியவளாகவும், அரசனின் மணமகளாகவும் ஆக்கி வைத்தாளே. அவைகளை எல்லாம் எண்ணிப் பாராமல், நீ ஏதோ உனக்குரிய செல்வங்களை ஆளப் பிறந்தவள்போல், அவை உனக்கு உரிமை யானவைபோல் நினைத்துக் கொண்டு, ஒரு நன்றி மொழியோ கும்பிடோகூடஇல்லாதபடி டாகூட இல்லாதபடி போய்விட்டாயே. உனக்கு நல்வாழ்வு வந்ததும் தலை திரும்பி விட்டது. செருக்கு மதியை மறைத்தது. உன் நன்றி கெட்ட தன்மையை நினைத்து நினைத்து ஓணான் தேவதை எவ்வளவு கண்ணீர் விட்டிருக்கிறாள் தெரியுமா?