உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




236 ||_

அப்பாத்துரையம் – 40

சக்கரஞ் சுழன்றுகொண்டிருக்க ஒரு மனிதனைக் கண்டான். அவன் உடம்பெல்லாம் செந்நீர் ஒழுகினபடியே இருந்தது. பேராசைப் பேயன் அவனைப் பார்த்து, “ஐயாவே! தலையின் மேலிருந்தொரு சக்கரங் சுழன்றுகொண்டிருக்க, நீர் இங்கு என் செய்துகொண்டிருக்கின்றீர்? இருக்கட்டும் முதலில் எனக்குக் குடிக்கத் தண்ணீர் எங்கே அகப்படும், சொல்வீரா? தாகத்தால் எனக்குப் பாதியுயிர் போயிருக்கின்றது" என்றான்.

66

இவ்வாறு இவன் சொன்னவுடனே அச்சக்கரம் இவன் தலைமேல் வந்து தங்கிச் சுழன்றுகொண்டிருக்கத் தொடங் கிற்று. அப்போது பேராசைக்காரன் சக்கரவிடுதலை பெற்றவனை நோக்கி, “ஐயனே! இஃதென்ன! இஃதென்ன,”என்று கதறினான்.விடுதலை படைத்தவன் “இதே மாதிரியாக இஃது என் தலைமேல் வந்தது," எனப் பார்ப்பான், ‘அஃதிருக் கட்டும், இஃது என்னை எப்போது விடும் சொல்லுமையா! பொல்லாத நோய் பொறுக்கக்கூடலியே!” என்று பின்னுங் கதறினான். அப்போது அம்மனிதன், “தன் கையில் மந்திர இறகுடன் உன்னைப் போலவே இங்கு ஒரு மனிதன் வந்து, நீ என்னைக் கேட்டது போலவே உன்னைக் கேட்பானாயின், இந்தச் சக்கரம் உன்னை விட்டு அவன் தலைமேல் ஏறி சுழலும்” என்றான். பிறகு தலைச் சக்கரக்காரன் விடுதலையடைந்தவனைப் பார்த்து, “ஐயனே நீர் இங்குவந்து இப்பொல்லாத் தொந்தரவில் எத்தனை நாளாக அகப்பட்டுக்கொண்டிருந்தீர் சொல்லுமையா” என, அதற்கு அவன் “நான் வரும்போது இராமன் அரசாண்டு கொண்டிருந்தான்; வறுமைப்பிணி பொறுக்க மாட்டாமற் புறப்பட்டுவர, வழியில் உன்னைப் போலவே மந்திர இறகு பெற்று மலைமேலேறி நடந்து கடைசியாக இவ்விடத்தை யடைந்தேன். நான் வந்தபோது இச்சக்கரம் ஒருவன் தலைமேற் சுழன்று கொண்டிருந்தது. யான் அவனைக் கேட்டது போலவே சில கேள்விகள் கேட்கவே ச்சக்கரம் என் தலையைப் பிடித்துக்கொண்டது. அவன் எத்தனை நூற்றாண்டுகள் இவ்வாறிருந்தானோ எனக்குத் தெரியவராது” என்றான். பிறகு பார்ப்பான், “ஐயனே! இந் நிலையில் நீர் உணவுக்கென் செய்தீர்! என அதற்கு அவன், 'இங்கே வந்து இந்நிலையை யடைபவர்க்குப் பசி தாகம் இல்லை; கிழத்தனமும் சாவும் இல்லை; இவ்வேதனையை அவர் இங்குள்ள நாட்களில் எல்லாம்

66