உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுகதை விருந்து

239

கழுத்தில் கட்டியது நம் இன்பத்துக்குத்தான் என்று நினைத்தோம். அது உண்மையில் நம்மை ஓடவிடாமலும் நல்ல புல்வெளியில் தங்குதடையின்றி மேயவிடாமலும் தடுப்பதற்காகத் தான் எனத் தெரியாமல் ஏமாந்தோம்" என்று சிற்றா தனக்குள் நினைத்துக்கொண்டது.

அதன்பின் சிற்றா முன்னிலும் பன்முறை முன்னிலும் வன்மையாகத் தலையைச் சுழற்றிச் சுழற்றி ஆட்டலாயிற்று. ஆனால், இப்பொழுது மணியின் இன்னொலி கேட்பதற்காக வன்று. மணியை எப்படியாவது உதறித்தள்ளி விடுவதற் காகவே, மணியும் எளிதில் போவதாயில்லை.

சிற்றாவின் சிந்தனையெல்லாம் அதுமுதல் எப்படிமணியை உதறித் தள்ளுவது என்பது பற்றித்தான்.

நல்ல காலமாகவோ அல்லது கெட்ட காலமாகவோ அந்த வாரைச் சேர்த்துக் கட்டிய சணல்நார் நைந்த நாரா யிருந்தது. தண்ணீர் குடிக்க ஓடையண்டை சென்றபோது வழக்கம்போல் சிற்றா தலையை ஆட்டவும், வியக்கத்தக்க வகையில் மணி உருண்டு தண்ணீருக்குள் விழுந்தது. அதனுடன் தனது பலநாளைய கவலை ஒழிந்ததெனச் சிற்றா துள்ளிக் குதித்து ஓடலாயிற்று.

என்ன வியப்பு! எவ்வளவு குதித்தும் இப்போது மணி ஓசையில்லை, இனி தனது மேய்ச்சல் மந்தைக்குள் கட்டுப் பட்டிருக்க வேண்டியதில்லை என்று எண்ணிச் சிற்றா மெல்ல மந்தையினின்றும் விலகி, மலையடி வாரத்திற்கு ஓடிற்று. போகும் வழியில் வளமான பச்சைப் புல்லைக் கண்டு 'நாம்தான் நற்பேறுடையோம்' என்று மகிழ்ந்தது.

மணியோசை கேளாததால் மருதப்பன் சிற்றாவை கவனிக்கவில்லை. சிற்றாவுக்கு இனி ஒரே ஒரு அச்சம்தான். முன் நாட்களில் வழி தவறியபோதெல்லாம் நாய் தன் பக்கம் பாய்ந்து தன்னைத் துரத்தியது அதற்கு நினைவு. நாய் தன்னை உண்மையில் கடிக்காது என்பது சிற்றாவுக்குத் தெரியாது. இன்று தன் மந்தை தப்பி அடுத்த மந்தைக்குப் போகவே அங்குள்ள நாய் குரைத்துக்கொண்டு சிற்றாவைத் துரத்திற்று நாய் என்றால்