உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுகதை விருந்து

1243

மேல்புறமுள்ள சோலைகளில் சென்று உலாவலாம் என்றான் நெல்லை. அதன்படி அச்சாலை வழியே அனைவரும் சென்றார்கள். வழியில்செம்மையும் வெண்மையும் கலந்த அழகிய கொய்யாக் கனிகள் ஒரு கடையில் விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்தன. வேலு அவற்றைக் காட்டி, “அதோ கொய்யாப்பழம் வாங்கித் தருவையா?” என்று சேந்தனிடம் கேட்டான். நெல்லை என்னிடமும் காசு இருக்கிறது, சேர்த்து வாங்கு" என்றாள். எல்லாரிடமும் உள்ள காசுகளைச் சேர்த்து இரண்டே முக்கால் அணாவுக்குக் கனிகள் வாங்கி அவைகளைச் சேந்தன், மடியில் கட்டிக்கொண்டான்.

66

திரும்பவும் சாலைக்கு மீண்டு வரும்போது வழியில் நிலைகாலில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு மிதிவண்டி மீது நெல்லை காலிடறி விழுந்தாள். தடாலென்று மிதிவண்டியும் விழுந்து பாதையின் பக்கமுள்ள கால்வாய்க்குள் சரிந்த நெல்லையின் கால் கம்பிகளில் பட்டு நோகக்கண்டும், அதனை அடக்கிக்கொண்டு வண்டிக்குரியவர் யாரேனும் வந்து திட்டுவார்களோ என்று அஞ்சினாள். அச்சமயம் யாரோ ஒரு சீமாட்டி அப்பக்கம் ஓடிவந்து “பாவம், சிறு குழந்தைகள், நான் வண்டியை இப்படி இடக்கான இடத்தில் வைத்திருக்கப்படாதுதான்” என்று கூறினாள். மேலும் அவள் விழுந்த பிள்ளை யார் என்று உசாவி நெல்லையை அன்பாயழைத்துத் தடவிக்கொடுத்துக் கடைக் காரனிடம் இன்னும் சில பழங்கள் கொடுக்கும்படி சொன்னாள். அஞ்சுதல் கொண்ட இடத்தில் இத்தனை நட்பு ஏற்பட்டது கண்டு மகிழ்ந்தனர் பிள்ளைகள். அவள் எவ்வளவோ நல்லவள். பிள்ளைகளுடன் பழகிய உயர்குடி மாதாக இருக்கவேண்டும் என்று எல்லாரும் பேசிக்கொண்டனர்.ஆனால், கதிரொளி மட்டுமே நம்மை இவ்வளவு பாராட்டிய அச் சீமாட்டியின் பெயர் இடம் எதுவும் உசாவி யறிந்து கொள்ளாமற் போனோமே என் வருந்தினாள்.

சாலை நெடுந்தொலை ஏற்றமாகச் சென்றது. பழங்களைத் தின்றுகொண்டே ஏறிச் சென்றனர். இடையில் வேறு தண்ணீர் வேண்டும் என்றாள். நீர்வீழ்ச்சி பக்கத்திலில்லா ததால் குடிநீருக்கு அங்கே எங்கே போவது என்று சுற்றிப் பார்த்தார்கள்.பக்கத்துத் தோட்டத்தினுள் வானளாவும் சக்கரப்