உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




5. மூட்டைப்பூச்சி

ஓர் ஊரில் மூட்டைப்பூச்சு இருந்தது. அதற்கு ஒரு பெண். அந்த பெண்ணை அது மிகவும் செல்வமாக வளர்த்து வந்தது. பெண் பூச்சி நன்றாக வளர்ந்து பருத்தது. அது முன்கோப முடையது. எடுத்ததற்கெல்லாம் அதற்குக் கோபம் வந்துவிடும்; முகத்தை சுளித்துக்கொண்டு மூலையில் போய் உட்கார்ந்து கொள்ளும். பிறகு தாய்ப்பூச்சி சென்று நல்சொற்கள் கூறிக் கொஞ்சினால்தான் அதற்குக் கோபம் தணியும். போதாக் குறைக்குத் தன்னிலும் அழகு மிகுந்த மூட்டைப்பூச்சி வேறெதுவுங் கிடையாது என்று நினைத்து, அது செருக்குக் கொண்டிருந்தது.

தாய்ப்பூச்சிக்கு இவையெல்லாம் பிடிப்பதில்லை. ஒரே பெண்ணாயிற்றே என்று பொறுத்துக்கொண்டிருந்தது. இருந்தாலும், அவ்வப்போது அது தன் பெண்ணிற்குச் சூடு கொடுக்கத் தவறுவதில்லை. “சொன்னேன் கேள்! பெண்ணாய்ப் பிறந்த உனக்கு இவ்வளவு முன்கோபமும், படபடப்பும் உதவா! எவ்வளவுக் கெவ்வளவு பொறுமையுடனிருக்கிறாயோ, அவ்வளவுக்கவ்வளவு சீர் பெறுவாய். உன்னைவிடக் கோபத்தில் நான் குறைந்தவளல்லள். இருந்தாலும் குடும்ப நிலையைக் கருதி அதையெல்லாம் அடக்கி வைத்துக்கொண்டிருக்கிறேன். மிகவும் முரண்டினாயோ ஒரே நசுக்காக நசுக்கி விடுவேன். ஒரே பெண்ணாயிற்றே என்று கூடப் பாரேன்! மனத்திலிருக்கட்டும்! என்று அது கூறும்போதெல்லாம் பெண்பூச்சி சற்று அஞ்சி அடங்கிவிடும். இருந்தாலும் அதன் பிறவிக் குணமாகிய முன்கோபம் அதனை விட்டபாடில்லை.

பெண்பூச்சிக்கு வயது வந்தது. அதற்கேற்ற மணமக னொருவன் வேண்டுமே என்று தாய்ப்பூச்சி கவலைகொண்டு தேடி அலையாக அலைந்தது. கடைசியில் பக்கத்தூரிலேயே