உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6. ஆபத்தை விளைக்கும் அழகான பொருள்

உலகில் எல்லாப் பொருளிலும் நன்மையும் தீமையும் கலந்தேயிருக்கும். தீ நமக்கு எவ்வளவு பயனுடைய பொருள். நம்முடைய உணவைச் சமைப்பதற்குத் தீத்தானே வேண்டும். அத்தீயே நம்மைச் சுடுகின்றதல்லவா? அதனால் அத்தீயை நாம் இகழலாமா? செல்வத்தை நாம் விரும்புகிறோம்.

செல்வத்தால்தான் உலகில் பல காரியங்களை நாம் செய் கின்றோம். நாம் உண்பதற்கும், உடுப்பதற்கும், படிப்பதற்கும், அறஞ்செய்வதற்கும் செல்வம் துணை செய்கிறதல்லவா? அச் செல்வத்தாலேயே ஒருவனுக்குத் தீமை வருவதும் உண்டு. செல்வனுக்குத் திருடரால் அச்சம் உண்டு. ஆனாலும், செல்வம் இன்றியமையாத பொருள். உலகில் எல்லோரும் அழகைத்தானே விரும்புகிறார்கள் அந்த அழகால் சில சமயம் தீமையும் உண்டாகிறது. அழகுடைய ஒரு பொருள் ஒருவனிடம் இருந்தால் அதைத்திருட நினைக்கிறான் மற்றொருவன். அதனால் பொருளுடையவன் பொருளை இழக்கிறான்.

ஆதலால் எல்லாப் பொருளிடத்திலும் நன்மை தீமை இருப்பதை நாம் உணரவேண்டும். ஆராயாமல் எந்தப் பொருளையும் நல்லது, கெட்டது என்று முடிவு செய்தல் கூடாது. மிகுந்த நன்மையுள்ளதை நல்லதென்றும் மிகுந்த தீமையுள்ளதைக் கெட்டதென்றும் ஆராய்ந்து முடிவு செய்தல் வேண்டும்.

ஒரு காட்டில் ஒரு கலைமான் இருந்தது. அதன் கொம்பு பல கவர்களாய்ப் பிரிந்து பார்ப்பவர் கண்களைப் பறிக்கும் படி அவ்வளவு அழகா யிருந்தது. நெடுநாள் அந்த மான் யாதொரு துன்பமுமின்றி மிக மகிழ்ச்சியாய் வாழ்ந்து வந்தது.