உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுகதை விருந்து

253

சிறந்தவர். பல இடங்களுக்குப்போய் மக்கள் தன்மைகளை உணர்ந்து ஒழுங்குபடுத்துவார்; அவர் நல்ல பொருள்களை அடையும்படி மக்களுக்கு அறிவித்தார். அவர் மொழிக்குப் பலர் இசைந்தார்கள்; அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டார்கள். நல்ல வழியில் நடக்கப் பழகிக் கொண்டார்கள்; நல்ல வாழ்வை மக்கள் பெறப்பாடுபட்டுப் பல நாளும் உழைத்தார்.

அவர் ஒரு கூடாரத்தையும், சேவலையும், ஒரு கழுதையையும் உடையவராயிருந்தார். அவர் அவற்றை எங்குப் போனாலும் எடுத்துக்கொண்டுபோவார். கழுதை கூடாரத்தைச் சுமக்கும். சேவல் கூவி நேரத்தைக் காட்டும். கூடாரம் தங்க இடம் கொடுக்கும். கோழி கூவினால் அகிபாய் எழுந்து கடவுளைத் தொழுவார். அவர் ஓரிடத்தும் நிலையாக இருப்பதில்லை. கடவுளையே மனத்தில் இருத்திக் காலம் கழிப்பார். ஒரு நாள் அவர் ஓர் ஊருக்குப்போனார். வழி நெடுந்தொலையானதால் ஊர் போய்ச் சேருமுன் இருட்டிவிட்டது. இரவு ஒன்பது மணி, ஊரிலுள்ள ஒவ்வொரு வீட்டுக்கும்போய்க் கதவைத் தட்டி இடங்கொடுக்கும்படி கேட்டார். ஒருவரும் இடம் கொடுக்க வில்லை. பிறகு 'எல்லாம் நன்மைக்கே' என்று சொல்லிவிட்டு ஊருக்கு வெளியே சிறிது தொலைபோய்க் கூடாரத்தை அடித்தார். இரவு பத்துமணியாயிற்று. பிறகு சிலநேரம் மறை ஓதினார். கடவுளை எண்ணிக் கொண்டே தூங்கிவிட்டார். விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது.

சிறிது நேரத்திற்குப்பின் ஒரு கழுதைப்புலிவந்து கழுதையைத் தூக்கிக்கொண்டு போய் விட்டது. பிறகு ஒரு நரி வந்து சேவலைப் பிடித்துக்கொண்டு போய்விட்டது. ஆசிரியர் எழுந்து பார்த்தபோது கழுதையையும் சேவலையும் காண வில்லை, அவர் “எல்லாம் நன்மைக்கே” என்று சொல்லிவிட்டு மறுபடியும் படுத்துக்கொண்டார்.

காலையில் எழுந்ததும் அவர் ஊருக்குள் சென்றார். அங்கே ஊராரெல்லாம் வந்து அவர் காலில் விழுந்து, "ஐயா நேற்று நாங்கள் உங்களுக்கு இடங்கொடுக்காததினால் கொள்ளைக் காரர் வந்து எங்கள் சொத்துக்களையெல்லாம் கொள்ளை யடித்ததுமல்லாமல், எங்கள் வீடுகளையும் தீக் கொளுத்திவிட்டுப் போய் விட்டார்கள்." என்று சொல்லி