உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வியப்பூட்டும் சிறுகதைகள்

263

பண்ணன் மீது எல்லாருக்குமே முன்பு இரக்கமும், நல்லெண்ணமும் இருந்தன. ஆகவே, இவ்வளவு நற் பேற்றையும் செல்வத்தையும் கண்டு யாரும் பொறாமைப் படவில்லை. அவனும் நண்பர் உறவினர்களுக்கெல்லாம் வாரி வழங்கி, அவர்கள் ஆதரவு பெற்றான். அவன் தாயையும் அழைத்துக் குறைவில்லாப் பணிவிடை செய்தான்.

பனைமரப்பூதம் பத்தாயம் கட்டிய இரவில், அதன் வீட்டிற்கு ஓர் அரிய விருந்தாளி வந்திருந்தது. அது தொலை நாட்டில் இருந்த அதன் மருமகன் பேரீந்தமரப் பூதமே. மாமனைக் காணாமல் அது இரவெல்லாம் அங்கலாய்த்தது. கடையாமத்தில் சேறும் செண்டும் அடர்ந்து சோர்ந்த நடையுடன் மாமன் பூதம் வந்து சேர்ந்தது. இரவெல்லாம் உழைத்தனால் அதற்குப் பேசக் கூட முடியவில்லை.

மெள்ள மெள்ளப் பண்ணன் பையிலுள்ள பூதத்தின் கதையை முழுவதும் பேரீந்தப் பூதம் கேட்டது. அது விலாப் புடைக்கச் சிரித்தது. ஆயிரம் பொன் பரிசு! ஓரிரவுக்குள் ஒரு பத்தாயம்! அது நிறைய ஆயிரம் கலம் நெல்!' என்று போட்ட போது அதன் சிரிப்பு சீற்றமாயிற்று.“மாமா! நீ இப்படி ஒரு மட்டி மாமாவாக இருப்பாய் என்று தெரிந்திருந்தால், உன் பெண்ணைக் கட்டியிருக்கவே மாட்டேன். போகட்டும், இனி இப்படிப்பட்ட சில்லுண்டி மனிதரைக் கண்டு அஞ்சாதே!” என்றது.

பனைமரப்பூதம், உள்ளூரப் புழுங்கிற்று. "ஏன், நீ அவ் வளவு அறிவுடையவனாயிருந்தால், அந்தச் சில்லுண்டி மனிதனை ஒரு கை பார்க்கிறதுதானே” என்றது.

"பார்! இரவு முடியவில்லை; விடிவதற்குள் உன் முன் அவன் குடலையும் மூளையையும் கொண்டு வருகிறேன் பார்!" என்று கூறிவிட்டுப் பேரீந்த மரப் பூதம் புறப்பட்டது.

பண்ணன் இரவெல்லாம் உண்மையில் விழித்திருந் தான். தனக்கு வாழ்வளித்த முகக்கண்ணாடியை அவன் வீட்டுப் பலகணியில் வைத்திருந்தான். விண்மீன் ஒளியால், கண்ணாடி யிலேயே பூதத்தின் வரவு போக்கு வேலைகளைக் கூர்ந்து கவனித்தான். பூதம் போனபின்பும் அவன் பத்தாய நெல்லைப் பயன்படுத்தும் வகை, அவ்வகையில் ஊராருக்குக் கூறவேண்டிய