உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வியப்பூட்டும் சிறுகதைகள்

275

அரசனையும் ஆண்டவனையும் ஏன் பழிக்கிறாய்? அதோ அரசர் இருக்கிறார். அவரிடம் வந்து உன் குறையைத் தெரிவி. அவர் ஆராய்ந்து முடிவு கூறுவார்.” என்றான்.

என்

"தம்பி! அரசனாலும் தீர்க்க முடியவில்லை வழக்கை. ஆண்டவன் திருக்கூட்டத்தாலும் தீர்க்கமுடிய வில்லை. மீண்டும் நான் ஏன் அரசனைப் பார்க்கவேண்டும்?" என்று கோமாறன் சீறினான்.

சிறுவன் புன்முறுவல் பூத்தான். "அந்த அரசனைச் சொல்லவில்லை, அன்பரே! அதோ நாங்களாகத் தேர்ந் தெடுத்த எங்கள் அரசர் இருக்கிறார். அவர் கட்டாயம் வழக்குத் தீர்த்துக் கூறுவார். ஏனென்றால், அவர் தீர்க்கா விட்டால், நாங்கள் எங்கள் குடியரசுத்திட்டப்படி அவரைப் பதவியிலிருந்து நீக்கிவிடுவோம். அதுமட்டுமல்ல நீதி காணாத மன்னன் என்பதற்காகத் தண்டனையும் அளிப் போம். ஆகவே, துணிவுடனும் நம்பிக்கையுடனும் வா” என்றான்.

வேறொரு சமயமானால், கோமாறன் சிறுவனையும் அவன் உரையும் கேட்டுச் சிரித்திருப்பான். குழம்பிய நிலையில் அவன் சிறுவனைப் பின்பற்றிச் சென்றான்.

மரத்தின் உச்சிக்கிளையில் ஒரு சிறுவன் மன்னனாக வீறுடன் உட்கார்ந்திருந்தான். அடுத்த கிளைகளில் வேறு சிலர் அமைச்சர், தலைவர்களாக அமர்ந்திருந்தனர். காவலர், ஏவலர், வீரர், குடிகளாக வேறு பலர் அழகுபடக் கீழே நின்று நடித்தனர். ஆய்ச்சிறுவர்களாகிய அவர்கள் அன்று தான் விளையாட்டாக ஒரு குடியரசு நிறுவியிருந்தார்கள். கோமாறனை அழைத்து வந்த சிறுவன் உண்மையில் இந்தப் புதிய குடியரசின் புதுப்பணியாளே.

“கோவேந்தன் வாழ்க! கோவேளிர் புகழ் ஓங்குக!” என்று காவலர் மன்னன் புகழ் பாடினர்.

ஏவலன் ஒருவன் கழியுடன் வந்து முன்னின்றான். அரசனை வணங்கி, "கோவேந்தே! வழக்கு மன்றம் தொடங் கிற்று; தோ அடுத்த நாட்டிலிருந்து வந்த ஓர் அயலானே தங்களிடம் குறையிரந்து நின்றான். உங்கள் நீதி எங்கும் பரவட்டும்” என்றான்.