உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வியப்பூட்டும் சிறுகதைகள்

277

கோவேந்தன் காரியத் திறமைகண்டு, சிறுவர் மீண்டும் வியப்புடன் அமைந்தார்கள். கோவேந்தன் கொடுத்த தாள் நறுக்குடன் பணியாள் அகன்றான்.

“காவலின் கண்ணியப் பொறுப்புடைய பெரியீர், நான் சிறுவர்களால் விளையாட்டாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டரசன்தான். ஆனால், அந்த நிலையிலேயே கோமாறன் வழக்கு என்னிடம் வந்தது, அதை நான் கேட்டேன். அதன் மாயம் எனக்குப் புரிந்துவிட்டது என்றே எனக்குத் தோன்றுகிறது. யாவருக்கும் விளக்கமாக நான் அதைத் தீர்த்துவிட்டால், அதை நடைமுறைப்படுத்த வேண்டியவர்கள் நீங்கள் தாமே! ஆகவே, எதிர்தரப்பாளராகிய மற்றக் கோமாறனையும், மனைவியையும் தாயையும் நண்பனையும் தங்கள் சார்பிலேயே என் மன்றத்துக்கு வரக் கட்டளை பிறப்பிக்கும்படி கோருகிறேன்.

66

என்னிடம் பணியாளாக நடிக்கும் சிறுவன் தங்கள் காவலருடன் சென்று, முறைப்படி எதிரிகளை அழைத்து வரவும் அருள்புரியுங்கள்”

இதுவே கோவேந்தனின் முடங்கல்.

முடங்கலைப்பார்த்து ஊர்காவலன் புன்னகை செய் தான். ஆனால், அதன் அமைதியும் அறிவும் பண்பும் அவனை வயப்படுத்தின. தீர்ப்பைக் காணும் ஆர்வமும் அவனுக்கு ஏற்பட்டது. ஆகவே, அவன் எதிர்பார்த்ததைவிட மிகுதி ஒத்துழைப்பைக் காட்டினான். சிறுவனுடன் தலையாரி யையே அனுப்பினான். வேண்டிய கட்டளையும் பிறப் பித்தான்.

அத்துடன் மற்ற வழக்கு நடவடிக்கைகளில் உதவ, ஏவலர் காவலர்களுடன் அவனே நேரில் வந்தான், எனினும் எவரும் கலவரமடையாத படி, பணிச்சார்பற்ற உடையிலே உருமாற்றிக் கொண்டு, யாரோ பார்வையாளர் போல வந்து அகல இருந்தான்.

மரத்தடியிலேயே மறுநாள் கேள்வி மன்றம் கூடிற்று. எல்லாம் முன்னாள் போலவே நடைபெற்றது. ஆனால் குறளிமாறன், பூமாரி, குணமாலை, மும்முடி ஆகிய அத்தனை