உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவுச் சுடர்

-

81

வாழ்க்கையைப் பற்றிப் பொதுவாகக் கூறினால் ஒரே முடிவுதான் கூற முடியும் - ஏனெனில் இளமைக் கால முழுவதும் ஒரே இழுக்கு, நடு முதிர்ச்சிக் கால முழுவதும் ஒரே போராட்டம்; முதுமைக்கால முழுவதுமோ ஒரே கழிவிரக்கம்.

அவன் பண்புடையாளன் என்று கூறப்படுபவர் நிலையி அதாவது எதுவும் செய்ய

-

லேயே பயிற்றுவிக்கப் பட்டான் முடியாதவனாகப் பயிற்றுவிக்கப்பட்டான்!

ஃபீல்டிங்.

ஐய, என் கை அச்சாளர், ஒரு நங்கை யாதலால் உம்மைப் பற்றி நான் எண்ணுவதைக் காதால் கேட்டுக் கை அச்சடிக்க முடியாது.நானும் ஒரு பண்புடையாளனாதலால் அதை மனம் விட்டுச் சொல்லவும் முடியாது. ஆனால் இந்த இரு தடையும் உமக்கு இல்லை. ஆகவே என் மனக் கருத்தை நீர் அறிந்து கொள்ளலாம்.

வில்லியம் கூப்பர்.

காலரிட்ஜ் ஆங்காங்கே வீணுரையாகச் சிதறிய சொற்களைப் பொறுக்கி யெடுத்துக் கொண்டால் போதும் ஒரு பத்துப் பன்னிரண்டு (டஜன்) கவிஞர்களுக்கு அவை ஈடு செலுத்தும்!

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கட்பண்பு இல்லா தவர்.

ஹூக்ஹாம்ஃவ்சேர்.

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி

மாசறு காட்சி யவர்க்கு.

திருவள்ளுவர்.

நினைப்பு சொல் செயல் எல்லாம் நல்லவனாகவே ருத்தல் வேண்டும். எளிய வாழ்க்கையே சிறந்தது. பிறருடன் அன்பாகவே நடக்க வேண்டும். எல்லா உயிர்களிடத்தும் அன்பு பாராட்ட வேண்டும். மனிதன் வாழ்க்கை முறையில் நற்பேறு அடைய வேண்டுமேயொழிய வழிபாட்டாலும், வரையாது