அறிவுச் சுடர்
83
ஏட்டுப் பேர்வழி ஒரு பெருத்த இடர் -அவன் வகையில்
விழிப்புடன் இருக்க!
பெருத்த விற்பனையுடைய ஏடு
-
ஜஸாக் டிஸ்ரெய்லி.
ஆம், இடைத்தர
அறிவுடை யோனுக்கு அமைக்கப்பட்ட பகட்டான கல்லறை மாளிகை அது!
லோகன். பி. ஸ்மித்.
நல்ல ஏடு என்றும் அல்லாத எடு என்றும் எதுவுமில்லை. ஏடு நன்று எழுதப்படுகிறது. நன்கு எழுதப்படவில்லை அவ்வளவுதான்.
ஆஸ்கர் ஒயில்டு.
நெருப்பு அருகே இருந்தாலும், தயக்கமில்லாமல் கையில் வைத்துக்கொண்டு படிக்க இடந்தரத்தக்க சுவடிகளே பயன்தரும் சுவடிகள் எனக் கூறத்தக்கவை ஆகும்.
அறிஞர் ஜான்ஸன்.
இந்நூலை வாசிப்பதைவிட அதை எழுதுவது எளிதாயிருந்
திருக்க வேண்டும். (ஒரு நண்பர் நூல் பற்றி).
கோல்டுஸ்மித்.
மனிதன் பேசும் ஆற்றல் படைத்திருப்பது தன் கருத்துக்
களை மறைப்பதற்காகவே.
வால்ட்டேர்.
மூளை நடுநிலைமையில் நிற்கும்போதுதான் நாக்கு இரு சார்புக்கும் அலைந்து திரியும்.
ஒரு பெரியார்.
சொற்போர் ஆண்மையுடையது; உரையாடல் பெண்மை யுடையது. நினைவாற்றல் குறையுந்தோறும் மக்கள் நா நீள்கிறது.
மண்டிஸ்யூக்.