உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




88

||-

அப்பாத்துரையம் - 41

முயற்சிகளே. வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகள், உலைவுகள், முரண்பாடுகள் ஆகியவற்றை ஒரே அமைதியில் பொருத்தி இணைத்துக் காண்பதே அவற்றின் முடிந்த முடிவான நோக்கம். இதற்காக அவை மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் உலகியல் திறம் சார்ந்ததாயிருக்கலாம். ஆன்மிகத்திறம் சார்ந்ததாயிருக்கலாம். ஆனால் இயற்கையின் உள்ளுறை அமைதி கண்டு, அக அமைதியுடன் அதைப் பொருத்தி நிறைவு காண்பதே இரண்டு திறங்களுக்கும் உரிய பண்பு ஆகும்.

கணக்கியலும் அறநூலும்

கணக்கியல் ஒன்றுதான் சரி நுட்பமான அறிவியல் துறை என்று கூறப்படுவதுண்டு.ஏனென்றால், இத்துறையின் மெய்மைகள் ஒருவித விலக்குக்கூட இல்லாமல் எல்லா, இடத்துக்கும், எக்காலத்துக்கும் பொருத்தமானவை. ஆயினும் கணக்கியலின் இதே சிறப்பை மற்றொரு துறையிலும் முனைப்பாகக் காணலாம். கணக்கியல் எல்லா அறிவியல் துறைக்கும் அடிப்படையான சரிநுட்ப அமைதிகளை விளக்குகிறது. அதுபோலவே வாழ்க்கை யின் சரிநுட்ப அமைதிகளை விளக்க முற்படுவது அறநூல்.

கணக்கியல் புற உலகின் சரிநுட்ப நிலையை விளக்குவது. அறநூல் அகநிலை அமைதி, அகப்புறத் தொடர்பு ஆகியவற்றின் சரிநுட்ப நிலைகளை விளக்குவது.

கணக்கியல் சரிநுட்ப நிலையின் உடலானால், அறநூல் அதன் உயிராய் அமையவல்லது.

பொதுவாக எல்லா இயல்களுமே கணக்கியலை அடிப்படையாகக் கொண்டவை என்ற அறிவியலுண்மை வரவரத் தெளிவாக உணரப்பட்டு வருகிறது. கணக்கியலுடன் சிறிதும் தொடர்பற்றது என்று பெரும்பாலும் கருதப்படுவது இசை. ஆனால் அதுகூட மிக நுட்பம் வாய்ந்த கணக்கியல் திறம் உடையது என்பதை நாம் இப்போது அறிந்து வருகிறோம். அடிப்படை இசைக்கூறுகள் தத்தம் அளவமைதியில் என்றும், எங்கும் மாறுபடுவதில்லை. அக் கூறுகளின் வகைதொகைக் கூட்டிணைப்புக்கள் எண்ணற்றவை. ஆயினும் தனிக்கூறுகளும் தத்தம் அளவைத்தன்மைகளில் மாறுபடுவனவல்ல. குறிப்பிட்ட