உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

அப்பாத்துரையம் - 41

ன்று,

நீராவி நூறு ஆண்டுகட்கு முன்னிருந்ததைவிட ஒன்றும் மிகுதி வலுவறியப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது அவ்வளவுதான்!

எமர்சன்

அறிவுநூலும் கலையும் உலக முழுமைக்குமே உரியன. அவற்றின் முன் தேச எல்லைகள் மறைகின்றன.

கெதே.

அறிவியல் என்பது பொது அறிவின் வடித்தெடுப்பான பகுத்தறிவின் உயர்நிலை - அது திட்பமான காட்சியறிவு - சிறு வழுவுக்கும் இடந்தராத ஆராய்ச்சியறிவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

டி. எச். ஹக்ஸ்லி

அறிவியல் என்பது வேறெதுவுமன்று; புலனறிவின் திறம்பட்ட வளர்ச்சி; அதன் திண்ணிய பொருள்கோள் பொது அறிவின் நுட்ப விளக்கம்.

ஜார்ஜ் ஸான்றாயனா

அனுபவ அறிவின் திட்டப்படுத்தப்பட்ட ஒழுங்கமைப்பே

அறிவியல்.

ஜார்ஜ் ஹென்ரி லூயி

எதிலிருந்து தோற்றம், எதை நோக்கி நாட்டம், இயங்குவது ஏன், எவ்வாறு இவ்வினாக்களின் விடையினுள் எல்லா அறிவு நூலும் அடங்கும்.

-

8. வரலாறு

ஃழுபெர்ட்

வரலாறு என்பது விளக்கச் சான்றுகளுடன் நல்லுரை தரும் மெய்விளக்க நூல் துறை என்னலாம்.

வைக்கவுண்ட் பாலிங்புரோக் (ஹென்ரி ஸென்ட் ஜான்)

வரலாறு என்பது ஒரு மாபெரும் நாடகக் காட்சி; காலமே அதன் மேடை; பொன்றா மெய்மையே அதன்