உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18

அப்பாத்துரையம் - 41

இயற்கை வழக்கமாகப் படைத்து உருவாக்காமல், பல நூற்றாண்டுகள் இடையிட்டு மிக அருமையாகப் படைக்கும் படைப்புக்களுள் அவர் ஒருவர் (நெப்போலியனைக் குறித்தது)

ஜூனோ

பரம்பொருளுக்கும் பச்சைமண்ணுக்கும் இடையே ஊச லாடும் ஒரு மணிப் பொறியின் ஊசல் வட்டு - இதுவே மனிதன்.

பைரன்

மனிதன் பண்பு எதுவாயினும் ஆகுக; அவன் ஒரு தனி வகைப் படைப்பு என்பதில் ஐயமில்லை. அவன் கடவுளின் திருவுருவ மல்லவானால், அவனை மண்ணுலகின் ஒரு நோய் என்று கட்டாயம் கூறியாக வேண்டும்.

ஜி. கே. செஸ்டர்ட்டன்

ஒரு மனிதன் பண்புகளுள் பொது மக்களால் மிகவும் பாராட்டப் பெறுபவை பெரும்பாலும் அவனால் மிகத் துச்சமாகக் கருதப்படுபவவையாகவே இருக்கும்.

ஒரு பெரியார்

மனிதன் வரவர அறிவுத்திறமையுடையவனாகலாம்; அறிவுக் கூர்மையும் சூழ்ச்சியுமுடையவனாகலாம். ஆனால் செயலில் வலிவும், இன்ப வளர்ச்சியும் நல்வாழ்வும் உடைய வனாதல் அரிது - அது கூடுமானால், ஊழிக் கணக்கான காலத்தின் பயனாகவே.

கெதே.

ஒரு சில குறைபாடுகள்தான் அவரிடமில்லை. அவை இருந்திருந்தால் அவரை முழுநிறை மனிதராகக் கொள்ளலாம். (டியூக்டி லாங்கெவிலைப்பற்றி)

திருமதி. டி. செவிஞி

வாசிக்கும் வகையை மட்டும் அறிந்தால் ஒவ்வொரு மனி

தனும் ஓர் ஏடேயாவன்.

வில்லியம் எல்லரி சானிங்

சிரிக்கவும் அழவும் செய்யப்கூடும் விலங்கு, மனிதன் மட்டுமே. ஏனெனில், 'உலகம் எப்படி இருக்கிறது, எப்படி