உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவுச் சுடர்

23

முன்னேற்றத்தில் உள்ள உறுதியான நம்பிக்கையே சென்ற நூற்றைம்பது ஆண்டுகளாக மேலை உலக நாகரிகத்தின் அடிப்படைப் பண்பா யிருந்து வருகிறது.

மிகு தூயதிரு. டப்ள்யூ. ஆர். இங்க், டி. டி.

இணக்கமுள்ள மனிதன், உலகுக்குத் தக்கபடி தன்னைச் சரி செய்து கொள்கிறான்; இணக்கமற்ற மனிதனோ, ஓய்வு ஒழிவின்றித் தனக்குத் தக்கபடி உலகத்தை ஆக்குவதிலேயே முனைகிறான். ஆகவே உலகின் முன்னேற்றங்கள் யாவும் ணக்கமற்றவர்களால் ஏற்படுபவையே.

பெர்னார்டு ஷா.

தாவி ஏறிச் செல்வது, தற்போதைய நிலையில் மனக்குறை யுறுவது, ஆகிய இவை மனிதன் உள்ளர்ந்த உணர்ச்சிப் பண்புகள் என்பதும், நிலையான வாழ்க்கை நிறைவை விரும்புவதே மற்றெல்லாம் உயிர் வகைகளின் உள்ளார்ந்த உணச்சிப் பண்பு பு என்பதும் விளக்கப்பட வேண்டிய ய மெய்ம்மைகள் ஆகும்.

மிகு தூயதிரு. டப்ள்யூ. ஆர். இங்க், டி. டி.

தற்காலப் புதிய முன்னேற்றங்களால் வரும் செல்வப் பெருக் கனைத்தும் பெருஞ் பருஞ் செல்வர் செல்வத்தைப் பெருக்கவும், இன்ப வாழ்வினர் இன்பமிகுக்கவும், உடையோர் இல்லோர் வேற்றுமை நிலையையும் மாறுபாட்டையும் அகலமாக்கவும் மட்டுமே பயன் படும்வரை, முன்னேற்றங்கள் உண்மையான முன்னேற்றமாகவோ, நிலையான முன்னேற்ற மாகவோ இருக்க முடியாது.

ஹென்ரி ஜார்ஜ்.

தொழிலுக்கு மேன்மேலும், மிகுதி ஊதியந் தர முயல் வதிலேயே முன்னேற்றம் அடங்கியுள்ளது.

கார்லைல்.

உலகின் பெரும்பாலான மூட மக்கள் எவ்வகை இன்னலு

மின்றி நன்கு வாழ்நாளை நடத்தி வருகிறார்கள்.

கார்ல். ஏ. மென்னிங்கர்.