உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




28

அப்பாத்துரையம் - 41

எல்லாவற்றையும் மாற்றியமைக்க வேண்டும் என்பவர் களும், எதையும் மாற்றக்கூடாது என்பவர்களுந்தான் வாழ்க்கைப் போரில் பெருத்த இடைஞ்சல் விளைவிப்பவர்கள்.

ஆஸ்டர் பெருமாட்டி.

எல்லா அரசியல் முறைகளிலும் சட்டம் அமைப்பவர்கள்

மக்களே.

எட்மண்ட் பர்க்.

18. குடியாட்சி

தொடக்க நாளிலிருந்தே நம் குடியாட்சிப் பண்பு மிகச் சிறந்த உயர் குடியாட்சிப் பண்புடையதாகவும், அதே சமயம் நம் உயர் குடியாட்சிப் பண்பு மிகச் சிறந்த குடியாட்சிப் பண்புடையதாகவும் இருந்து வந்திருக்கிறது. (பிரிட்டனைப்

பற்றி)

மெக்காலே.

தன் தனிப்பட்ட நலங்களை மதித்துப் பேணி வளர்க்கும் மனிதன், பொதுச் சமூக நலனுக்கு எதிரியாகிறான் என்ற கருத்து அடிப்படையான ஒரு தவறாகும். குடியாட்சியின் தனிச் சிறப்பு யாதெனில், தனி மனிதன் தன் நலத்தைப் பேணும் வகைகளாலன்றி, பொது நலத்தை வளர்க்க முடியாது என்ற கருத்தே.

பேராசிரியர் ஸி. கே. ஆலன்.

மக்கள் அரசியல் தவறு செய்யாதவர்கள், என்று எண்ணுதல் தவறு; அவர்கள் பெருந் தவறு செய்கிறார்கள். அதை உணரவும், அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறார்கள். ஆனால் வல்லாட்சி வகைகளின் தவறுகளைப் பார்க்க, இவை குறிப்பிடத் தக்கவையேயல்ல.

மிகப்

கால்வின் கூலிட்ஜ்.

பொதுநிலைப்பட்ட மக்களுள்ளாக மிகச் சிறப்பு வாய்ந்த அடங்கியலான ஆற்றல்கள் உள்ளன என்ற மெய்ம்மையை அடிப்படையாகக் கொண்டதே குடியாட்சி.

ஹாரி எமர்சன் ஃபாஸ்டிக்.