உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவுச் சுடர்

41

வழக்கறிஞர்களைப்போல மருத்துவரும் மாறுபட்ட கருத்து கொள்ளுவதுண்டு. வழக்கறிஞர் மாறுபாடுகளில் தீர்ப்புக் கூறுபவர் மன்ற நடுவர். ஆனால் மருத்துவர் மாறு பாட்டிடையே யார் கூறுவது! தவறு என்பதைக் காட்டுபவன் நோயாளியின் சவப்பெட்டி அமைப்பவனே!

ஜேம்ஸ் வாலர்.

மருத்துவரும் அரசியலறிஞரும் ஒருவகையில் ஒப்பாவர். உடல் அல்லது அரசியலின் அமைதியை அவர்களுள் ஒரு சாரார் காப்பர்; மற்றொரு சாரார் குலைப்பர்.

ஒரு பெரியார்.

(அடிக்கடி) நோயைவிட மருந்து கொடிதாயிருப்பதுண்டு.

போமண்ட் ஃவ்ளெச்சர்.

உலகிலுள்ள மருத்துவரின் மருந்துகளத்தனையையும் கடலகத்தில் போட்டமிழ்த்திவிட்டால் அது மனித உலகுக்கு நன்மையா யிருக்கும்; மீன்களின் உலகிற்கு மட்டுமே அது தீமை பயக்கக் கூடும்!

ஹால்ம்ஸ்.

மருத்துவர் என்பவர் தமக்குத் தெரியாத மருந்துகளை, தமக்குச் சிறிதளவும் தெரியவராத நோய்களைத் தீர்க்கும் படி, தமக்கு எவ்வகையிலும் அக்கறையற்ற மனிதர்களுக்குக் கொடுப்பவரே ஆவர்.

வால்ட்டேர்.

மருத்துவர் ஒவ்வாரென்னில் மன்னி உரைப்பார் யாரே? கருத்துற ஆயும்யாங்கள் மாறுறின் கருத்தும் என்னாம்?

27. உரையாடல்

இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்கொலோ

வன்சொல் வழங்கு வது.

கவிஞர் போப்.

திருவள்ளுவர்.