உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவுச் சுடர்

49

32. மெய்யறிவு

ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே

மெய்யுணர் வில்லா தவர்க்கு.

திருவள்ளுவர்.

காலரிட்ஜ்.

பொது அறிவெல்லை கடந்த நிலையே மெய்யறிவு.

முனைத்த மெய்யறிவு என்று நாம் கூறுவது முந்திய தலைமுறைகளின் மெய்யறிவுத் தொகுதியின் புது விளைவே நம் மிகச் சிறந்த தற்காலச் செயல் முறைகள் முறிந்து பட்டமரத்தின் வேர்களில் தோன்றிய புது முனைகளே.

எச். டப்ள்யூ. பீச்சர்.

டெல்ஃபித் தெய்வ மொழியாளர், கிரேக்கரில் சிறந்த அறிவாளி என்று என்னையே குறிப்பிட்டது ஏன் தெரியுமா? தனக்கு ஒன்றுமே தெரியாது என்பதைத் தெரிந்தவன் கிரேக்கர்களுள் நான் ஒருவனே.

ஸாக்ரட்டீஸ்.

அறிவின் பிறப்பிடம் எது, அது எங்கேயுள்ளது, அது யாரால் இயக்கப்படுவது - இவற்றை அறிந்தவன் மெய்யறிஞன்.

ஏ. ஏ. ஹாட்ஜ்.

ஒவ்வொருவர் அறிவினும் உயரிய அறிவு ஒன்றுண்டு;

அதுவே அனைவரின் அறிவு.

சொல் மிக அருகிய இடமே அறிவு மிகுந்த இடம்.

டாலிராண்ட்.

ஸாஃபக்ளிஸ்.

அறிவை அறிவது மெய்யறிவன்று; அறிவைச் சரிவரப்

பயன்படுத்த அறிவதே மெய்யறிவு.

ஸ்பர்ஜியன்.

மெய்யறிவாளன் உண்மையான அறிவுலகில் ஒரு தொடக்க வகுப்புக் குழந்தை. அவன் இயற்கையின் புரியாப் புதிர்