உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவுச் சுடர்

67

காலமென்னும் பேரேட்டின் பக்கங்களில் எத்தனையோ சிறப்புடையவர் பெயர்கள் எழுதப்பெற்று வருகின்றன. ஆனால், ஒரு பெயர் எழுதப்பெறும்போது மறுபெயர் அழிய, அல்லது மங்க விடப்படுகிறது. ஆனால், இவற்றிடையேயும் ஒரு சில என்றுமழியா ஒளியெழுத்துக்களாக இலங்குகின்றன.

எண்ணில் இசைதேர்ந்த ஆன்றோர் அருஞ்செயலே மண்ணில் மலர்ந்து வாடா உயிர்மலரே.

லாங்ஃவெல்லோ.

ஷர்லி.

மனித இனத்தின் நல்வாழ்க்கை யின்பத்தை மேம்படுத்தும் நற்செயல்களின் மீதன்றி நிலையான மெய்ப்புகழ் நாட்டப்பெற மாட்டாது.

சார்லஸ் சம்னா.

41. இன்பமும் துன்பமும்

இன்ப வாழ்க்கையாளன் ஒருவன் ஒரு கோவிலகத் தலைவ னாக, வேட்டைக்காரனாக, படக்காட்சி நடிகனாக, உண்டி விற்போனாக இருக்க முடியும்; முதல்தர ஓவியக்காரனாக, சிற்பியாக, இசைஞனாக, இலக்கியப் படைப்பபாளனாக, எந்த ன்ப வாழ்வினனும் இருந்ததில்லை.

ஜே.ஜி. நேதன்.

துன்பம் ஒருவனுக்கு அவனையே அறிமுகப்படுத்தி வைக்கிறது.

ஓர் அறிஞன்.

கடவுள் மக்களைத் துன்பக் கடலின் ஆழத்துக்குக் கொண்டு செல்வது அவர்களை அதில் அமிழ்த்துவதற்கன்று; அவர்களை நீராட்டித் தூய்மைப் படுத்துவதற்கு.

ஆதி.

ஓயா வெற்றி நமக்கு உலகின் ஒரு புறத்தையே காட்டுகிறது.

துன்பம் அதன் மறுபுறத்தை உணர வைக்கிறது.

கோல்ட்டன்.