உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவுச் சுடர்

71

வாழ்க்கையின் மயக்கங்களை அகற்றும் நிகழ்ச்சிகள் நிறைந்தது இளமை. மயக்கங்கள் அகன்றவுடன் ளமையும் முற்றுப் பெற்று விடும்.

ஆர்தர் வாக்.

மக்கள் பல்வேறு வயதில் முதுமை அடைகின்றனர். சிலர் 65 ஆண்டு முதுமையுடன் பிறந்து உடனேயே வாழ்க்கையிலிருந்து ஒதுங்கத் தொடங்குகிறார்கள். சிலர் 90 வயதில்கூட 21 வயது ளமையை விடுவதில்லை.

பெருவாழ் வுடையதப் பேரொளி விடியல் மருவும் இளமையெனில் வானெழில் ஒளியே.

(பிரெஞ்சுப் புரட்சி குறித்து)

வோர்ட்ஸ்வொர்த்.

இளமையின் அகரவரிசையில் 'தோல்வி' என்ற சொல்

கிடையாது.

புல்வர் லிட்டன்.

இளமையில் கற்கிறோம்; முதுமையில் உணர்கிறோம்.

மெரி எப்ளா எஷென்பாஃக்.

இளமையின் முதுமை 40; முதுமையின் இளமை 50.

(மணமாகாக்) கன்னியர் இளையராயின் இடர் ஆவர்; நடுவயதின ராயின் வருந்துதற்குரிய நிலையினர். ஆனால் முதுமை யிலோ அவர் மகிழ்வுக்குரியவராவர்.

அறிஞர் ஸ்டீவென் டெய்லர்.

ளமை ஒரு பெரும் பிழை; நடு வயது ஒரு பெரும் போராட்டம்; முதுமையோ ஒரு பெருங் கழிவிரக்கம்.

டிஸ்ரேலி.

இளமை காரியமுணர்ந்தால், முதுமைக்கு உணர்ந்ததை ஆற்றும் ஆற்றலிருந்தால், வறுமை என ஒன்று உலகிலிருக்க மாட்டாது.

பழமொழி.