86
அப்பாத்துரையம் – 43
பாதுகாப்பதுடன், தம்மைத் தமே அவை பாதுகாத்துக் கொள்ளவும் பயிற்றுவிக்கின்றன.
மனிதன் இவ்வளவும் செய்வதே எளிதில் முடியாத காரியம், ஏனெனில், மனித நாகரிகத்தில் சமூகம் நெடுந்தொலை வளர்ந்துவிட்டது. தனி மனிதன் சமூகத்தினளவு வளரவில்லை. சமூகத்தைத் தம் அறிவால் வளர்த்தவர் சிலரே யாதலால், அச் சிலரே, சமூகத்தின் தலைமை வகித்து நடத்தினர். இவர்கள் பிறரை அதில் பங்குகொள்ளப் பயிற்றுவிக்கத் தவறினர். இது மட்டுமன்று, தலைமை வகித்தவர்களும் தம் வின்னோரைத் தலைமை வகித்து நடத்தப் பயிற்றுவிக்கவில்லை. ஆகவேதான் அறிவற்ற தலைவராகிய பின்னோர் முன்னோர் வழக்கங்களைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றி, உயிரற்ற பழக்கங்களாக ஆக்கினர். புதிதாக அறிவுடைய தலைவர்கள் தோன்றிச் சமூகம் வளர்ச்சியடைந்தாலும், வளர்ச்சி மரபு தடைப்பட்டு, சமூக வளர்ச்சியில் மக்களும் பங்குகொள்ள முடியாமல் தலைவரும் தொடர்ந்து அதனைப் பேண முடியாமல் ஆயிற்று. இதற்கிடையில் அறிஞர் பலரும் பலபலவாறாக வளர்த்த அறிவுப் பகுதிகள் ஒரே பேரறிஞராலோ, ஒன்றுபட்ட அறிஞர் கூட்டுறவாலோ ஒருமுகப் படுத்தப்படாமல் போயின. தனித்தனி அறிஞர் சமூகத்தின் தனித்தனிக் கூறுகளின் தலைமையைக் கைக்கொண்டு, பலதுறைச் சிறப்பறிவை வளர்த்தனர்.
ன
எனவேதான், இன்றைய நாகரிகத்தில் சமூக நோக்கு. மனித
நோக்குக்குன்றி, தனி மனிதன் நோக்குத் தலை விரித்தாடுகிறது. இத் தனிமனிதருள்ளும் அறிஞராகவோர் படிப்படியாகப் பொதுவான மனித இன நலமறிந்து குழு நலமும்; குழு நலமறந்து தன்னலமும், தனி நலமும் பேணினராதலால், தம் அறிவைத் தம் தற்காலிகப்போலி நலத்துக்கும் அத்தன்னலத்தினைப் பெருக்க உதவும் குழு நலத்துக்கும் விற்கலாயினர். இதன் பரந்துபட்ட பயன் சமூக முழுவதையும் மனித நாகரிக முழுவதையும் பாதித்துள்ளது. ஒவ்வொரு தனிமனிதன் வாழ்வும். இங்ஙனம் சமூக வாழ்வில் ஓர் உறுப்பாக நிற்காமல் தனிப்பட்டு விட்டதாகையால், அவன் அறிவு வளரும் போதும் உடல் வளர்வ தில்லை. இரண்டும் வளரும்போதும்கூட சமூகம் அவனால் வளரவோ, சமூகத்தால் அவன் வளரவோ செய்வதில்லை.