உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

||-.

அப்பாத்துரையம் – 43

வேண்டும். பெரும்பாலும் பிள்ளைகள் தாய் தந்தை, சமூகச் சூழ்நிலை ஆகியவற்றால் கெட்டாலன்று, இத் தீங்குகள் அவர்கட்கு இயல்பாக உண்டாகவும் முடியாது. ஆனால், எக் காரணத்திலாவது இவைத் தோன்றினால், அவர்களிடம் இப் பண்புகள் குழந்தைப் பண்பாக இராமல் சமூகப் பண்பாயிருப்ப தனால், சமூகந் திருந்த அவர்கள் ஒறுப்பதற்குரியவரே.

எடுத்துக்காட்டாக மண் தின்னும் பிள்ளையை அன்பினால் திருத்த நினைப்பது, அது கண்டும் காணாமலும் அப் பழக்கத்தில் தோய்ந்து, மீளா அடிமையாய் விடவே ஏதுவாகும். கண்டவிடத்தில் சிறிது அன்பை ஒதுக்கி வைத்திருப்பதால், 'சூடு கண்ட பூனை அடுப்பிடை நாடாது' என்ற அடிப்படை உயிரினப் பண்பின் மூலமாகக் குழந்தை நிலையாகத் திருத்தமடைந்துவிடும். மின்சாரக் கம்பிகளைக் கையாள முனைதல், பொறி வண்டிகள் செல்லும் பாதையில் செல்லுதல், பாம்பு, தேள் முதலியவற்றைப் பொம்மைகளாகக் கருதி அடுத்துச் செல்லுதல் ஆகிய காரியங்களில் குழந்தையின் பகைவரன்றி வேறு எவரும், அதனை ஒறுத்து விலக்கத் தயங்கமாட்டார்கள். இங்கே தண்டனையின் பயனை நோக்கத் தண்டனையின் கடுமை மிகக் குறைவே யாகும். சில பிள்ளைகளிடம் சமூகச் சூழல் காரணமாக ஏற்படும் அடிமைப் பண்பும், ஆதிக்கப் பண்பும் இது போலச் சமூகப் பண்புகளாதலால், திருத்துவதால் போகாது, ஒறுப்பினாலேயே போகக்கூடிய அடிப்படைத் தீமைகள் ஆகும். ஆனால் இவ்வொறுப்பின் விளைவுகளும் தாய் தந்தையர்கள் அன்பினாலேயே முழுப்பயன் பெறக்கூடும். எடுத்ததற்கெல்லாம் அடித்தொறுக்கும் தாய் தந்தையர்கள் இத்தகைய செயல்கண்டு அடித்தொறுப்பதால் பயன் சிறிதும் ஏற்படாது. ஏனெனில், தாய் தந்தையர் பிள்ளைகளை அடிக்க நேர்ந்தால், அது தம்மை அடிப்பதை ஒத்ததாகவே இருக்கும். அன்பின்றி அடிக்கும் தாய் தந்தையர் ஒறுப்பு, பகைவர் ஒறுப்பாயிருக்குமேயன்றி தாய் தந்தையர் ஒறுப்பு ஆகமாட்டாது.

பிள்ளைகளைத் தம் விளையாட்டுப் பொம்மைகளாக்கும் தாய் தந்தையரும், ஓயாது அவர்களை மடிமீதும் தோள் மீதும் இட்டுவளர்ப்பவரும், அவர்கள் சொல்கேட்டு நடக்கும் பிள்ளைப் பித்தரும், அவர்களை வீட்டுக்குள்ளேயே அடைத்துக் கிளிப்