உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாத்துரையம் - 43

(118) ||__. வேறு யாருக்கோ உரியது என்று கிடக்கின்றனர். இந்நிலையில், சிந்திக்கும் தொழிலை மேற்கொண்ட அறிஞர்கூட, ஆதிக்கவாதிகளின் கைப்பாவைகளாகவே செயலாற்ற முடிகிறது.

தனிமனிதன் பொறுப்பற்ற நிலையிலிருந்து தொடங்கிப் பொறுப்பற்ற ஒரு நாகரிகமாக இன்று கீழ் நாட்டுலகம் வளர்ந்து வருகிறது. மேல்நாட்டுக்கு ஒப்பான நிலையில் கீழ்நாடுகளில் சமூக, அரசியல், சமய, ஒழுக்க நிலையை உயர்த்த வேண்டு மென்றால்கூட, பல அறிஞர் பல காலம் பலியாகவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கீழ்நாட்டு மக்கள் பொறுப்பும், அறிஞர் பொறுப்பும் மிகப்பெரிது, அதனை வகிப்பதற்கான முதல் தகுதி தனிமனிதன் பொறுப்பு வகிக்க அவாவும்படி அவனைத் தூண்டுவதே.

இன்றைய மனிதர் யாவரும் வெளிப்படையாகத் தனிமனிதன் ஒழுக்கத்தை மட்டுமே வற்புறுத்துகின்றனர். ஆனால், அத் தனிமனிதன் ஒழுக்கமும்கூட, நிறைவுடையதாயில்லை. சமூகத்தைப் பேணும் பண்பும், சமூகத்தை வளர்க்கும் பண்பும் ஆகிய ஆக்கப் பண்பாய் அஃது இல்லாமல், சமூகத்தை வளர்க்கக் கருதாத எதிர்மறைப் பண்பாக மட்டுமே இயல்கிறது என்பதைப் பலர் கவனிப்பதில்லை."தன் காரியம் தனக்கு; அடுத்தவன் நன்மை தீமைகளில் நாம் ஏன் வீணாகத் தலையிட்டுக்கொள்ள வேண்டும்; சமூகத்திலும் நாட்டாட்சியிலும் யார் இருந்தாலென்ன, இருப்பவர்களை எதிர்க்காது நாம் வாழ்ந்து விட்டுப் போவோம்," என்பவையே இன்றைய கீழ்நாட்டு மனிதன் வானளாவிய உயர்நெறிப் பண்புகள் ஆகும். அவன் செயல், அவன் வாழ்வு ஆகியவற்றின் பின்விளைவுகளையோ, காரணங்களையோ பற்றி அவன் கவனத்தைத் திருப்ப முயன்றால்கூட, இவற்றுக்குத் தடையாக அவன் முன்வினைப்பயனும், மேலுலகத் தண்டனை களும் வந்து குறுக்கிடும்; இவை அவன் பொறுப்பற்ற வாழ்வுக்கு ஒத்த சப்பைக் கட்டுகளாகவே அமைகின்றன என்பதை அவன் கவனிப்பதில்லை. ஆதிக்க வாதிகளின் வேட்டைப் போட்டி களிடையே வளர்ச்சியுற்ற அடிமைத்தனத்தின் நிழலில் தங்கிய அறிஞர், தம் அடிமைத் தனத்துக்கு விளக்கமாகக் கூறியவையே இவை என்பதையும் யாரும் ஊன்றிக் கவனிப்பதில்லை.