உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

அப்பாத்துரையம் - 43

இரண்டாமவனுக்குச் சிறியதொரு வேலை கிட்டிற்று. அவன் முன்னிலும் பன்மடங்கு ஊக்கமாக உழைத்தான். முன்னினும் எச்சரிக்கையாகச் சேமப்பணத்தைப் போட்டு வைத்தான். விரைவில் அவன் முன்போலவே பணம் திரட்டிச் செல்வன் ஆனான். அத்துடன் துன்பத்தி லாழ்ந்து நலிந்தவ னையும் அவன் அழைத்து வேலை தந்து உதவி, அவனையும் ஆட்படுத்த முயன்றான்.

வந்த இடரில் கருத்துச் செலுத்துபவன் அதனை ஒழிக்கும் ஆற்றல் உடையவனாகமாட்டான். சென்ற இடரில் கருத்துச் செலுத்துபவன் மேலும் இடரை வர வழைப்பான். இடரில் கருத்துச் செலுத்தாதவன் மட்டுமே இடரைத் தடுத்தாள்வதுடன், அதனை நற்பயன் தரும் படிப்பினையாகவும் கொள்கிறான். அது அவனுக்கு ஒரு கருவியாய்ப் புது உரமும் புது ஊக்கமும் உதவியும் தருகிறது.

உலகச் சூழல்கள் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் மூலகாரண மாகக் கூடுமானால், அவை உலக மக்கள் அனைவரையுமே ஒரே வகையாக வாழவோ, தாழவோ, வகை செய்யக்கூடும். அதுமட்டு மல்ல, ஒரே இடத்தில், ஒரே சமயத்தில் உள்ள ஒரே சூழ்நிலை ஒருவருக்கு முற்றிலும் நல்லதாகவும், மற்றொருவருக்கு முற்றிலும் தீயதாகவும், வேறு பிறருக்கு நன்மை தீமைக் கலப்புடையதாகவும் இருக்கக் காண்கிறோம். எனவே மக்கள் வாழ்வும், தாழ்வும் வாழ்வு தாழ்வு வேறுபாடுகளும் புறச்சூழல் களுள் காரணமானவையாக இருக்க முடியாது. அவரவர் மனநிலை காரணமாக எழுந்தனவாகவே இருத்தல் சாலும். இதனை நாம் உணர்ந்து நம் எண்ணங்களைக் கட்டுப்படுத்தி ஒழுங்கமைத்து, நம் உள்ளத்தை ஆன்மாவின் நற்கோயிலாகப் பண்ணமைக்க வேண்டும். அதன் திருவெல்லையிலிருந்து தூய்மைக் கேடான பண்புகளை மட்டுமன்றி, தேவையற்றவை பயனற்றவை ஆகிய பண்புக்கூறுகளையும் அகற்ற வேண்டும். மகிழ்ச்சி, அமைதி, உரம், ஊக்கம், உயிர்ப்பு, அன்பு, நேசம், அழகு, ஒழுங்கு ஆகிய நல்ல பண்புக் கூறுகளைத் தேர்ந்து மேற் கொள்ளவும் வளர்க்கவும் வேண்டும்.

புறநிகழ்ச்சிகள் அவற்றின் மெய்யுருவில் நமக்கு வாளா தெரிவதில்லை. நம் எண்ணங்களை ஆடையாகப் போர்த்துக்