திருநிறை ஆற்றல்
171
தன்னலஞ்சார்ந்த எதிர்மறைப்பண்புகள் தனிமனித னுக்குத் தொடக்கக் கவர்ச்சி தரலாம். ஆனால் அந்தக் கவர்ச்சி அடிமைப்பண்பின் கவர்ச்சி. அது நினைவாற்றல்களை மனிதன் இயக்குவதற்கு மாறாக அவற்றுக்கு அவனை அடிமைப்படுத்தி, அவற்றால் அவன் இயக்கப்படும்படி செய்கிறது. பற்றுறுதி, அமைதி, குறிக்கோளுடமை, பொதுநலநாட்டம் ஆகிய ஆக்கப் பண்புகளிலிருந்து அது மனிதனைப் பிரித்துக் குலைக்கிறது. மறைபண்பின் இக்கவர்ச்சியிலிருந்து விலக நேர் பண்பாகிய ஆக்கப்பண்புகளைப் பேணிப் பயிற்சி பெற வேண்டும். இதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. புறமுகநோக்கு அடிமைப்படுத்தும். ஆகவே ஆண்மைதரும் அகமுகநோக்கிற் பயிலவேண்டும். படிப்படியாகப் புற உலகப்போக்குகளின் அகநிலைக் காரணமறிந்து, அகநிலை அறிவையும் அகநிலை ஆராய்ச்சி யையும் பேணி வளர்க்க வேண்டும்.
தீமையை
மறுப்பதனால் அது போய்விடாது. நன்மையை அவாவுவதனால் அது வந்துவிடாது. ளது. தீமை யின் காரணமறிந்தே அதை விலக்கமுடியும். அப்போதே நன்மையில் நம்பிக்கையும் பற்றுறுதியும் ஏற்படும். தீமையின் காரணம் அடிமைத்தனம். உள்ளத்தின் போக்கைக் கட்டுப் படுத்தும் நல்லாண்மை இல்லாததால் அது தோன்றி வளர்கிறது. உள்ளத்தை உள்நின்றியக்கும் ஆண்மையை, தன்னடக்கத்தால் படிப்படியாகப் பேணும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். து நல்லுணர்ச்சியினால் ஏற்படுவதன்று. உணர்ச்சிகடந்து அது செயலாற்ற வேண்டும். அது அறிவு முயற்சியன்று. அறிவு கடந்து செயல்துறையில் அது முனைய வேண்டும்.
தன்னடக்கப் பயிற்சி ஒருவனுக்குத் தன் அகநிலை நினைவாற்றல்கள் பற்றிய அறிவைத் தருகிறது. அவற்றை அவன் இயக்கப் பழகுகிறான். அகநிலைப் பண்பின் இயக்கம் புறநிலை உலகை இயக்கும் ஆற்றலாகிறது. உலகம் தனது என்ற தன்னம்பிக்கையும், உலகை இயக்கும் நல்லாற்றலில் பற்றுறுதியும் ஏற்படுகிறது. அவன் வாழ்க்கையில் சலியா நோக்கம் உடைய வனாகவும், பொது நலப்பற்றுடையவனாக - அஃதாவது தெய்வ நம்பிக்கை உடையவனாகவும் அமைகிறான். பற்றுறுதியற்றவர் கைப்படும் காரியங்களெல்லாம் தகர்கின்றன. ஆரவாரத் தெய்வப்