திருநிறை ஆற்றல்
பரந்த அரையிருளில் மணற்பரப்பில் பள்ளமெல்லாம் பதிந்த அடிச்சுவடென் றெண்ணிநீ ஏங்கற்க! தெரிந்த அவைமறையும் அளவில் தெரியுமவன் தேரா அருளுருவின் சுவடு, நீ தெளிந்திடுவாய்! காந்த அவன்குரலில் இசைகேட்க விரும்புதியேல், கறங்கு பிறகுரல்கள் செவிகொளாக் கலைபயில்க! சுரந்த நிறைமோனத் தூநிலையில் நிறைஇசையாய்ச் சூழும் உனதுமுழு வாழ்வில் அவன் இசையே!
மாய்கின்ற எல்லாம் நீ மாயவிடு, சாயவிடு! மாய்மால உலகில்எலாம் துறந்துவிடு! மால்தீர்க்கும்
ஆய்நின்ற அருளொளியை அகத்தே நீ காண்குவையேல், அகம்பற்றும் அவையெல்லாம் அறநீத்துக் கழுவிவிடு! வேய்கின்ற புறஆடை மேற்போர்வை அகற்றிவிடில் வெளிமதில் வாய்திறந்து காட்டும் வியன் அருளே!
காய்கின்ற எல்லாமும் காய்ந்துநிற்கும் கதிரின்ஒளிக் கவின்உனது வாழ்விடையே மாறாக் கவின் நல்கும்! மோனம் முடிந்த இடம் மேவி உறையுமவன் மூவா முதலடி முன்னிப் பழித்துயர்கள் போன திசையறியாப் போத நிலைபெறுவாய்! புத்தேள் அவன் இன்பப் புத்தொளியில் ஆடிநீ. வானம் தலையாக, வளர்திசை ஆடையாய், மண்ணாழம் அடியாக, மனிதஉளம் உயிராக, ஊனம் களையநின்ற உரவோன் உரைமோனம் உள்ளச் செவியுற நீ ஓய்வுற் றமைவுறுவாய்!
ஆடி அலைந்துநீ அமைந்த நாளெல்லாம் ஓடி ஒழியநீ உள்ளத் தமைதி கண்டு,
கூடி அவன் அன்பின் கூறாம் அருள்தோய்ந்து, குலவு நிறைவாய்மை ஊற்றிற் குளித்துநீர் ஆடி அவன் இசை பாடிக் களித் துன்றன் ஆகம் பிறிதாக, அகமும் புதிதாக, ஊடி உளமார உயிரின் உலவாத
245
(4)
(5)
(6)
உள்ளன் புருக்கி உவகை பெருக்குவாய்!
(7)