4
அப்பாத்துரையம் - 43
கலங்களை உடைக்கக் காத்திருக்கும் கொடும் பாறைகளும் உண்டு. இவற்றைத் தாங்கத் துணிந்து கடற்பயணத்தி லிறங்குவோர் இப் பேரிடையூறுகளைக் கடந்து உயிருடன் தப்பினால், அங்ஙனம் தப்பி வெற்றி கண்டபின், தாம் அதனால் பெற்ற அறிவைத் தம்மைப் போல அக்கடலகத்தில் பயணஞ் செய்வோருக்கு வழிகாட்டியாகத் தருதல் ஒருதலை. கடற்கொள்கைக் காரரும் பகைவரும் நீங்கலாக, மனித சமூகத்தில் எவரும் - மனித இன வளர்ச்சியில் கருத்துக் கொண்ட எவரும் இத்தகைய பணியைத் தம் உயிர்க்கடனாக ஏற்றுக் கொள்ளாமலிரார்.
இவ்வறிவுரைகள் இன்னல்களை நீக்கமட்டுமல்ல; ஆற்றல், அறிவு, இன்பம் ஆகியவற்றைப் பெருக்கவும் பயன்படுபவை. பத்தாண்டுகள் ஓர் அயல்மொழியை வருந்திக் கற்ற ஒருவர் பிறருக்குத் தம் அறிவைத் தருவதானால், அவர்கள் அதே முறையில் பத்தாண்டு அதனைக் கற்பதில் செலவு செய்ய வேண்டியிராது. ஓராண்டுகளில் அதனைக் கற்று. மீந்த மூன்று ஆண்டுகளில் இன்னும் ஒரு மொழியோ, கலையோ கற்கலாம். இதனால் பத்தாண்டுக் காலத்தில் மனிதன் அடையும் பயன் தலைமுறைதோறும் விரிந்து பெருகுகிறது. அறிந்த அறிவு வருங்கால அறிவுக்கு முதலீடாகி மேன்மேலும் அறிவாகிய வட்டியைத் தருகிறது. புத்தறிவாகிய இவ்வட்டியும் பழைய அறிவுத் தொகுதியில் சேர்ந்து அடுத்த தலைமுறையில் ஏற்கெனவே அறியப்பட்ட பழைய அறிவுடன் ஒன்றுபட்டு அத்தலை முறையினரின் முதலீடாகிறது. இதனையே நாம் பொது அறிவு என்கிறோம். இங்ஙனம் அறிந்த அறிவு பெருகுந்தோறும் இன்னும் அறியப்படாத அறிவுக்கான வாயில் பெருகுகிறது. “அறிதோறு அறியாமை கண்டற்றால்," (குறள் : 1110) என அறிஞர் கூறுவது இதனையே ஆகும்.
66
கடற்பயணத்தைவிட, கல்வியறிவைவிட வாழ்க்கை பல வகைச் சிக்கல்கள் உடையது. இவ்விரண்டையும்விடப் பல திறப்பட்ட நுண் நயங்களும் வாழ்க்கையில் உண்டு. அச்சந்தந்து எச்சரிக்கை செய்யும் பெருந்துன்பங்களைவிட, அறிவை மறைத்துப் பேரளவான பொல்லாங்கு தரும் சிறு வழுக்கள் அதனிடையே உண்டு. உள்ளார்ந்த நலங்களை வெளிப்படக் காட்டி நன்மைக்குத் தூண்டுதல் தரும் கவர்ச்சிமிக்க பெரும்