உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநிறை ஆற்றல்

உடையவன் திரிதரு நூலாழி

உருள்தர உருள்தரும் ஒளிர்நூலே!

277

கடும்புயல் வீசுவதுகண்டு யாரும் கடுஞ்சினம் கொள்வ தில்லை. ஏனெனில் எந்த அளவு அது கடுமையுடையதோ, அந்த அளவு அது கடுகி ஓயும் என்பதை அறிவோம். புயலின் அழிவு பெரிதாயினும், அவ்வழி பொருளே பின் ஆக்க வளத்தின் கருமுதல் ஆகிறது. அதுபோலப் பூசலும் பொறாமையும் வேற்றுமையும் உலகை அலைக்கழித்தாலும், அவை ஓய்வது உறுதி. அத்துடன் அவ்அழிபாடே மறுபடி ஆக்கத்துக்கு மூலதனமாய் உதவும். அழிவில் உறுதியும், துயரில் இரக்கமும், வெறுப்பில் அன்பும் கரந்துநின்று செயல் விளைவான எதிர் விளைவுகளை உண்டு பண்ணுகின்றன. அவற்றின் மீதே மெய்யுணர்வின் கோயில் எழுப்பப்படும்.

வரம்பிலா

வாய்மைஒளி கண்டவன்

வீறமைதி

யுடையவன். எல்லையிலா அருளன்புடையவன். அரவில்லா ஆழ்ந்த உருப்பளிங்கு போன்ற தெளிந்த உள்ளமுடையவன். அவன் வாயாடா மோனத்தில் பிறக்கும் சிறு சொற்களும் கருத்துச் செறிந்து கருத்துத் தூண்டுவனவாய், உலகில் நல்ல கருத்தலைகளையும், நல்லுணர்வலைகளையும் பரப்பும்.

"இறையருள் ஒளியிலாது இறையருள் காணார், குறையிருள் பார்வை யலால் இருள் இலையே!’ என்று திறவா வாய் திறந் துரைத்தது

கன்றிய பாலையில் கன்னிமுக அரிமா'

மருள்தரு மாய மருட்கை மொழியினில் வாழ் வூழ் வாய்மை வினாவிய வதற்கே! தடுமா றுளத்துடன் தடம்பிறழ்ந்து அலைந்தேன், படிறுடை விழியொடு படுதுயர் அடைந்தேன்! அன்பொளியாலே அமைதியின் வழிகொள, முன்புள மறைவிழி யோடு மறைப்பும் மறைந்திட இறையருள் மனத்தகத் தொளிர, இறையருள் ஒளிதர இறைஒளி கண்டேன்!

1. கன்னிமுக அரிமா - Sphinx.