திருநிறை ஆற்றல்
[287
ஆனால் மனிதன்மூலம் செல்லும் இயற்கையாற்றலின் திசை அகத்திலிருந்து புறமானால் மனிதன் உயிர்ப்பண்பு ஊக்கம் பெறுகிறது. புற அமைதியுடன் அக அமைதி இசை வதால் இன்பங்கள் ஏற்படுகின்றன. இது நிலையான பேரின்பக் கூறு. அதே சமயம் துன்பங்கள் அக அமைதியுடன் புறத்தேயுள்ள மாறுபடும் பகுதியின் முரண்பாட்டால் தான் ஏற்படுகிறது. அக அமைதியுடன் இயற்கையின் மாறாப்பகுதி ஒத்துழைத்து மாறுபடும் புறப்பகுதியை வெல்வதால், இங்கே துன்பமும் காரணகாரியத்தொடர்பில் கருத்தைத் திருப்பிப் புறத்தேயுள்ள மாறுபடும் இயல்புடையசூழலை எளிதாக மாற்றியமைக்கிறது. இம்முறையில் அகத்திருந்து புறஞ்செல்லும் போக்கு அறிவுப் போக்காக வளர்கிறது. உயிரினங்களின் வளர்ச்சிப் படியும் மனித இனத்தின் நாகரிக வளர்ச்சிப் படிகளும் இத் திசையிலேயே இயங்குகின்றன.
கடலின் மேற்பரப்பில் புயல்கள் வீசும்போதும், அதன் ஆழ்பகுதியின் பெருங்கூறு ஒருசிறிதும் அசையாமல் நின்று நிலவுகிறது. மேற்பரப்பில்கூட ஆழங்குறைந்த கரையோரப் பகுதிகள் நீங்கலாக, அகல்பெரும் பரப்பில் புயல்கள் செயலாற்றுவது குறைவே. அலைகடல் என்று கவிஞர்கூறும் கடலில் இங்ஙனம் கரையில் வாழும் மனிதன் காணும் ஒருசிறு பகுதி மட்டுமே அலைகின்றது. அதன் மிகப் பெரும் பாலான பகுதி அமைதியின் அகல் பரப்பாகவே இயங்கு கின்றது. கடலின் இத்தன்மை இயற்கையின் தன்மைகளுடன் பேரளவு பொருத்தமுடையது. மாறுபடும் பகுதி அதன் மேற்பரப்பின் ஒருகூறே. மேற்பரப்பின் பெரும்பகுதியும் அதனினும் பாரிய ஆழப்பகுதி முழுவதும் அமைதிப் பிழம்பேயாகும். இயற்கையின் சின்னஞ்சிறு பதிப்பாகிய உயிரினிடமும் மனிதனிடமும் அமைதிப் பகுதி, மாறு படுபகுதி ஆகியவற்றின் தொடர்பு இதுவே. உயிரின வளர்ச்சியில் மற்ற உயிரினங்களை விட மனிதன் இயற்கையின் அமைதிநிலை நோக்கி முன்னேறி, இன்னும் நாகரிக முதிர்வடையுந்தோறும் முனைந்து செல்பவனேயாவான். ஆகவேதான் பார்வைக்கு மனிதனின் மாறுபடும் புறப்பகுதி வலுவுடையதாகத் தோற்றினாலும், அது போலித் தோற்றமேயாகின்றது. நீரின் இயல்பைப் புறந்தோன்றாமல் மறைக்கும் பனித்திரைபோல,