உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

அப்பாத்துரையம் – 43

கூடாததன்று. இத்தகைய படிப்பினையுரைகளே 'காதல் வாழ்வின் கடமைகள்' என்ற கட்டுரையில் தரப்பட்டுள்ளன.

குடும்ப வாழ்வின் வளத்தக்கான அறிவுரைகளைக் 'குடும்பத் தலைவரின் பொறுப்புகள்,' 'பெற்றோர் பொறுப்பு', ஆகிய இரு கட்டுரைகளிலும்' உறவினர், அயலார், ஊரார், அரசியல், உலகம் எனப்படிப்படியாக விரிந்து செல்லுகின்ற உலக வாழ்விடையே தனி மனிதர் கொள்ள வேண்டிய பொறுப்புடையப் பங்கைக் 'குடிமையின் உரிமையும், பொறுப்பும்' என்ற கட்டுரையிலும் காணலாம்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுரையும் தெய்வத்துள் வைக்கப் படும்

(குறள். 50)