12
அப்பாத்துரையம் - 43
கவனியாமல் அறிவைப் பேண எண்ணுவது, முதலை விட்டுவிட்டு வட்டியில் மிகுதி ஆர்வமுடையவராயிருப்பது போன்ற மடமையேயாகும்.
உடலுழைப்பைப் புறக்கணித்து அறிவுழைப்பை மதிக்கும் தீய பழக்கம் பெருகியதன் காரணமாகப் பலர் தன் மதிப்பு, தற்சார்பு, தன்முயற்சி ஆகிய மூன்றையும் விட்டு அடிமைத்தனம், கோழைமை, மடமை ஆகியவற்றுக்கு ஆளாகிறார்கள். உழையாதிருப்பதே உயர் குடியின் பண்பு என்னும், அதே சமயம் உழைப்பவரைவிட உயர் ஊனுடைய கொள்ளுதலே சிறப்புடைய தென்றும் கருதும் இவர்கள், தம் வருவாய்க்கு மேற்பட்ட இன்பப் பொருள்களில் நாட்டம் வைக்கின்றனர். இதனால் அவர்கள் கடன்படவும், தொல்லைப்படவும் வெளிப்பகட்டுக்காகக் குடும்ப வாழ்வில் இடர்ப்பட்டு நரகவேதனை அடையவும் நேருகிறது. இது மட்டுமோ? தம் மிகுதிப்படையான செலவினங்களைச் சமாளிக்க உதவுவதற்காகவே இவர்கள் அரசியற் பணி, அலுவலகப் பணி ஆகியவற்றை நாடியலைந்து அதற்காக ஆண்டுள்ளோரைச் சுற்றித் தொடூண்ழியர் போலப்பசப்ப வேண்டியதாகிறது.
மகிழச்
தாம் ஆடை நெய்வது குறைவு என்று கருதும் இவர்கள், நெசவாலை நடத்துபவரிடம் போய்க் குறையிரந்து தொழில் பெறத் துடிக்கின்றனர். அது பெற்ற பின்னும் தம் தொழிலில் காட்டும் ஆர்வத்தினும் தம் தலைவரை மன செய்வதிலேயே ஆர்வம் காட்ட வேண்டியவராகின்றனர்.அரசியற் பணியிலீடுபட்டார் தம் மேற்பணியாளர் பேச்சுக்கு ‘ஆமாம்’ போட்டு, அவர் கொள்கைக்கு இணங்கி, அறிவைப் பறிகொடுக்க வேண்டியவராகின்றனர். இவரினும் மிகுதி உயர்வு பேண எண்ணுகின்றவர் சின்னஞ்சிறு பொருள்களை எடுத்துச் செல்லக்கூட ஏவலாளர்களை எதிர்பார்த்து நிற்கும் கோழை களாய் விடுகின்றனர். மற்றும் பலர் இம் மாய வெளிப்பகட்டுக் காக உள்ள நிறையையும், வாய்மையையும் கெடுத்துத்தகாத வரிகளில் கருத்துச் செலுத்தி வஞ்சனையும் கொடுமைகளும் மறைவில் புரிபவராகின்றனர்.
வாழ்க்கையின் வாயிற்படியாகிய இளமையே இத்தீய பண்புகள் பற்றும் காலமாதலால், இளைஞர் இப்பொறிகளிற்