உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கார்ல் மார்க்ஸ் எழுதிய முதலீடு

35

உழைக்காத அவர்களுக்கு, முழு உடலாற்றலை ஈடுபடுத்தி உழைக்காத அவர்களுக்குக் கூலி போதாது! முழு உடலாற்றலும் ஈடுபடுத்தி உழைப்பவர்களுக்கு மட்டும் கூலி போதும்!

சமூகம் இதுபற்றிச் சிந்திப்பதில்லை. சமூகம் வகுத்துக் காண்ட மொழியின் மாயத்திரை இது கூலி. ஆதாயம், வருவாய் ஆகிய சொற்கள் இத்திரையின் மூன்று சாயங்கள்.

கூலி, ஆதாயம், வருவாய்!

பொருள்களைச் சரக்குகள் ஆக்கும் முறைக்கே தொழில் என்று பெயர். இம்முறைக்குத் தேவையான பண்புக் கூறுகள் (1) உழைப்பு, (2) மூலப் பொருள், (3) துணைக்கருவிகள் ஆகியவை. இவற்றுள் உழைப்புக் குரியவர் தொழிலாளியே. மூலப்பொருள், துணைக்கருவி ஆகிய இரண்டும் தொழிலின் சாதனங்கள் ஆகும். இவற்றுக்கு உரியவராகவே முதலாளி தொழிலில் இடம்பெறுகிறார்.

என்று

மூலப் பொருள்கள் இயற்கை தரும் பொருளாயிருந்தால், அப்போது அவற்றை நாம் மூலப்பொருள்கள் கூறுவதில்லை. அவை விலைமதிப்பற்ற முதற்பொருள்கள். மற்ற மூலப்பொருள்கள் யாவும் முன்பே ஒரு தொழிலின் பயனாகக் கிட்டிய சரக்குகளேயாகும். துணைக் கருவிகளும், நிலைக் கருவிகளாகிய இயந்திரக் கருவிகள், கட்டடம் முதலியவைகூட விலைமதிப்புடையவையே. முன் ஒரு தொழில் அல்லது சில தொழில்களின் பயனாக ஏற்பட்ட சரக்குகளே அவைகள். இப்பொருள்களுடன் பொருள் ஆக உழைப்பாளியின் உழைப்பும் முதலாளியால் வாங்கப் பெறுகிறது. ஒருநாள் உழைப்பை அளவாகக் கொண்டு முதலாளி அதற்கு ஒரு விலை பேசியே தொழிலாளியைத் தொழிலில் சேர்க்கிறான். இந்நாள் உழைப்பின் விலையே கூலி அல்லது நாட்கூலி ஆகிறது. வாரக் கூலி இந்நாட் கூலியின் பெருக்கமே. அதுவும் ஆறுநாள் உழைப்புக்குப் பின் ஒருநாள் ஓய்வு என்ற கட்டுப்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்பே ஆறு நாட்கூலி வாரக்கூலியாகக் கணக்கிடப்பட்டது. இதனால் தொழிலாளிக்கு ஒரு நாள் ஓய்வு கிட்டிற்று. ஆனால் முதலாளிக்கு இதில் ஆதாயம் இல்லாம லில்லை. ஏழுநாள் உழைப்பு முன்கூட்டி விலையிடப்பட்டு விட்டது.