உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கார்ல் மார்க்ஸ் எழுதிய முதலீடு

தொ.ந. உழைக்கிறீர்களோ?

45

எதற்காக, யாருக்காகத் தாங்கள்

மு : எல்லாம் இத்தனை தொழிலாளர்களுக்கு வேலை கொடுப்பதற்காகத்தான்.

தொ.ந. அப்போது தங்கள் முதலீட்டின் மீதுள்ள வட்டி போக மீதியைத் தொழிலாளர்களுக்கே விட்டுவிடலாமே?

மு : (சுண்டிய முகத்துடன்) ஒரு சில தொழிலாளர்கள் நலத்துக்காகப் பயனீட்டாளர்களை மறந்துவிடலாமா? அவர்களுக்கு மலிவான சரக்குகளைத் தரத்தான்..

தொ.ந.: தேவைக்குமேல் உற்பத்தி செய்கிறீர்களாக்கும்? (முதலாளி முகத்தில் எரிச்சல் தட்டுகிறது. பொருள் நூல் அறிஞர் தலையிடுகிறார், மீண்டும்.)

பொ.அ. : உடலுழைப்பும் உழைப்புத்தான். மூளையு ழைப்பும் உழைப்புத்தான் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்கள் அல்லவா?

தொ.ந.: ஆகா! அதற்கென்ன தடை?

பொ.அ: அப்படியானால் முதலாளி உழையாதவர் என்று நீங்கள் எப்படிச் சொல்ல முடியும்?

(முதலாளி முகத்தில் புன்முறுவல் எழுகிறது, அருகே பணிமனை மேலாளர் தாள் கட்டுகளுடன் வந்து நிற்கிறார்.)

மு : ஒவ்வொரு நாளும் தொழிற்சாலையைச் சுற்றிப் பார்த்து மேற்பார்வை யிடுவது, கணக்கு சரிபார்ப்பது, திட்டம் வகுப்பது எல்லாம் யார் என்று நினைக்கிறீர்கள்?

(மேலாளர் மெல்ல நகைக்கிறார்.)

தொ.ந: (மேலாளைச் சுட்டிக்காட்டி அதோ அவர் என்று அல்லவா இதுவரை நினைத்தேன்.

(வீண் பேச்சினால் தம் மதிப்புக் கெடுவதை உணர்ந்து முதலாளி தம் திண்டைத்தட்டி மாற்றிப் போட்டுவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டார்.)