உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நூற்சிறப்பு

நூல்: உலகையே மாற்றியமைக்க உதவிய ஒரு நூல் எது என்று கேட்டால் 'சமூக ஒப்பந்தம்' என்று தயங்காமல் கூறலாம். அமெரிக்கப் புரட்சிக்குத் தூண்டுதல் தந்து, பிரஞ்சுப் புரட்சியை எழுப்பி, உலகப் புரட்சிக்கே அது மூல காரணமாயிருந்தது.

‘சமூக ஒப்பந்தம்' அல்லது 'அரசியல் உரிமை முறையின் தத்துவங்கள்,' என்பது நூலின் முழுப்பெயர். 1756இல் தொடங்கி முற்றுப்பெறாது விடப்பட்ட ‘அரசியல் நிலையங் கள்' என்ற பெருநூலின் ஒரு முழுப் பெரும் பகுதி அது.

சிரியர்: 'ஒரு சுதந்திர நாட்டில் பிறந்து, அதன் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமைப் பேறு பெற்றவன்,' என்று சமூக ஒப்பந்தத்தில் அதன் ஆசிரியர் ஜீன் ஜாக்ஸ் ரூசோ, தம் தாயக அரசு பற்றிப் பெருமைப்படுகிறார். அத்தாயக அரசு ஜெனிவாவே. அவர் அதில் 1712இல் பிறந்தார். 'கலைகளும் இயல்களும் மக்கள் சமூக வாழ்வை மாற்றியமைத்த வகை' 'சமத்துவம் கெட்டழிந்த வரலாறு' என்ற கட்டுரைகளும் கல்வி முறை பற்றிய கருத்துரையான 'எமிலி'யும் 'சமூக ஒப்பந்த'மும், 'உள்ளக் கருத்துகள் (confessions) என்பதும் அவரது சிறந்த நூல்கள் 'சமூக ஒப்பந்தத்’தில் ஜெனிவா அரசியலைப் புகழ்ந்திருப்ப தனால், அந்த நாட்டரசியல் அந்நூலை நன்கு வரவேற்கும் என்று அவர் நம்பியிருந்தார். ஆனால் அதன் மக்கள் சமத்துவக் கேட்டை அவர் கண்டித்திருந்ததனால், அந்நூல் அரசியலாரால் எரிக்கப்பட்டது. அவரும் அந்நாட்டின் குடியுரிமையை 1763இல் தூக்கி எறிந்தார். 1778இல் அவர் இயற்கை யெய்தினார்.