உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ரூசோவின் சமூக ஒப்பந்தம்

53

ணக்கம் முன்னைய ஓர் ஒப்பந்தத்தின் மரபு என்று காணலாம். அவ்வொப்பந்தம் ஓர் இயற்கை ஒப்பந்தம்-ஓர் எழுதா ஒப்பந்தம் - ஒரு மரபு ஒப்பந்தம். ஏனெனில் அடிமையின் பிள்ளை இயல்பாய் அதைத் தற்காலிகமாக ஏற்பதுபோல, ஒப்பந்தம் செய்தவன் பிள்ளையும், பிள்ளையின் பிள்ளையும், அதை இயல்பாக மரபாய் ஏற்கின்றனர். அது எழுதா ஒப்பந்தம். ஏனெனில் எழுத்து வகுக்கப்படுமுன், மொழிகள் தோன்று முன்பே அது வழங்கியது. அது இயற்கை ஒப்பந்தம். ஏனெனில் இயற்கைத் தேவை அடிப்படையில், இயற்கை உணர்ச்சி அடிப்படையில் அது தோன்றி வளர்ந்தது.

இயற்கை வாழ்வு தனி வாழ்வு. மனிதன் கூட்டுறவு வாழ்வு வாழும் உயிரினங்களைச் சேர்ந்தவன். தொடக்கத்தில் கூட்டு வாழ்விலும் அவன் தனித்தனி உரிமையும் தனித்தனி பாதுகாப்புப் பொறுப்பும் உடைய வனாகவே இருந்திருக்க வேண்டும். இதில் எல்லா மனிதருக்கும் சரிசம நிலையே இருந்தது. அவர்கள் ருவருக்கு ஒருவர் உதவியிருப்பர். திறமை அல்லது வல்லமையுடையவர் துணை விரும்பப்பட்டது. அதே சமயம் துணை எத்தகையவர் தனித்திறத்தையும் உயர்த்திற்று. முழுக் கட்டைகள் உத்தரமானால். சிறிய கட்டைகள் விறகாகவும், சிறு துரும்புகள் பல்லுக் குச்சியாகவும் பயன்படலாம் அல்லவா?

கூட்டுறவில் உரிமைகள் வளரவில்லை. ஆனால் பாதுகாப்பு வலு வளர்ந்தது. தனிமனிதன் ஆற்றல் சிறிது, அவனைத் தாக்கிய டையூறுகள் மிகப் பெரியது. அதே சமயம் டையூறுகள் அவ்வப்போது தான் நேர்ந்தன. எனவே ஒவ்வொருவரின் டையூற்றிலும் அனைவர் மொத்தப் பாதுகாப்பு வலுவும் பயன்பட்டது. கூட்டு வலுவின் இப்பயன் கண்டு தனி மனிதர் தாமாகத் தம் உரிமைகளைக் கூட்டுறவின் கையில் ஒப்படைத்து அதைப் பொதுவுரிமை ஆக்கினர். அதற்கும் அவர்களே உறுப்பினர் என்ற முறையில் உரியவர்களாதலால், அவர்கள் பழைய இயற்கை உரிமை இப்போது புதிய குடியுரிமை ஆயிற்று. குடியுரிமையும் குடியும் பேணும் பொறுப்பு கடமையாயிற்று. இக்கடமை சமுகத்தின் பாதுகாப்பு வலுவை வளர்த்தது.

ஆகவே சமூக ஒப்பந்தத்தின் மூலம், ஒவ்வொரு தனி உறுப்பினன் உரிமைகளையும் உடைமைகளையும் பேண, அவன்